Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்த 23 வயது வீரரின் திறமையை இப்போதாவது தெரிஞ்சிக்கோங்க.. வேற லெவல்.. அஸ்வின் பாராட்டு

சென்னை: ஆசிய விளையாட்டு போட்டிகள் 2026 பைனலில் பாகிஸ்தானை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி தங்கப் பதக்கத்தை வென்றது. இதில் அதிரடியாக விளையாடிய திலக் வர்மா குறித்து இந்திய அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 211/6 ரன்கள் குவித்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த திலக் வர்மா, வெறும் 22 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 231.82 ஸ்ட்ரைக் ரேட்டில் 51 ரன்கள் விளாசினார்.

Tilak Verma

திலக் வர்மாவின் மெதுவான ஆட்டத்தை விமர்சித்தவர்களுக்கு அஸ்வின் தனது யூடியூப் சேனல் வீடியோவில் பதிலடி கொடுத்துள்ளார். "திலக் வர்மா மெதுவாக விளையாடுகிறார் என்று அனைவரும் அவர் பின்னால் ஓடிக்கொண்டிருந்தனர். ஆனால், அவர் இங்கு கொடுத்த ஃபினிஷிங்கைப் பாருங்கள். உங்களுக்கு வேறு என்ன தான் வேண்டும்? அவரது தரம் மற்றும் திறமை பற்றி உங்களுக்குத் தெரியாதா?" என்று அஸ்வின் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதே வீடியோவில் பேசிய விஜய் சங்கர், "பெரிய போட்டிகளிலும், இறுதிப் போட்டிகளிலும் திலக் எப்போதும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். இத்தகைய பெரிய மேடைகளில் பொறுப்பை ஏற்றுக்கொண்டு முக்கியமான ரன்களை குவிப்பது எளிதல்ல. அங்குள்ள அழுத்தத்தைக் கையாளுவதே மிக முக்கியமானது, அதை அவர் மிகச் சிறப்பாக செய்கிறார்" என்று விஜய் சங்கர் கூறினார்.

"ஸ்கோர் பெரியதாகத் தெரிந்தாலும், சிவம் துபே அந்த இரண்டு அல்லது மூன்று ஓவர்களை வீசி விக்கெட்டுகளை எடுத்தது அந்த கட்டத்தில் மிகவும் முக்கியமானதாக இருந்தது. சில நேரங்களில் இத்தகைய பங்களிப்புகளும் அணியின் வெற்றிக்கு வழிவகுக்கும்" என்று பாராட்டினார்.

சிவம் துபேயின் பேட்டிங் பங்களிப்பையும் அஸ்வின் வெகுவாகப் பாராட்டினார். "அணியில் சிவம் துபேயின் இடம் குறித்துக் கூட சந்தேகங்கள் எழுந்தன. ஆனால், அவர் மீண்டும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். 2024 டி20 உலகக் கோப்பையிலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் இதைச் செய்தார்."

"இது ஒரு அற்புதமான இன்னிங்ஸ் ஆகும். அவரது ஆட்டத்தாலும், தொடக்கத்தில் திலக் வர்மா மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோரின் சிறப்பான பேட்டிங்கினாலும் தான் நம்மால் 211 ரன்களை எட்ட முடிந்தது. பாகிஸ்தான் விளையாடிய விதத்தைப் பார்க்கும்போது அது ஒரு சவாலான இலக்காகத் தோன்றியது. அந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது எளிதாக இருக்கவில்லை" என்று அஸ்வின் கூறினார்.

Story first published: Monday, October 5, 2026, 22:17 [IST]
Other articles published on Oct 5, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+