Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹிந்தி தேசிய மொழி அல்ல.. அஸ்வின் பேச்சுக்கு எகிறிய சத்தம்.. அடுத்தடுத்து வரும் விமர்சனம்

மும்பை : ஹிந்தி நமது நாட்டின் தேசிய மொழி கிடையாது. அது வெறும் அலுவல் மொழி தான் என தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் பேசியதற்கு மாணவர்கள் சத்தம் போட்டு வரவேற்பு அளித்தனர். ஆஸ்திரேலிய தொடரில் பாதியில் இருந்து தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஓய்வு பெற்று நாடு திரும்பினார்.

அப்போதே வெளிநாட்டு தொடர்களில் அஸ்வினுக்கு தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்படுவதால் அஸ்வின் இந்த முடிவை எடுத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை விமர்சிக்கும் வகையில் நேற்று கருத்து தெரிவித்திருந்த தமிழக கிரிக்கெட் வீரர் பத்ரிநாத், கில் மட்டும் தமிழ்நாட்டில் இருந்து வந்திருந்தால் அவர் எப்போது அணியை விட்டு நீக்கி இருப்பார்கள்.

r ashwin ashwin speech today ashwin on hindi national language

ஆனால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைத்து வருகிறது என்று பேசி இருந்தார். மேலும் தமிழக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த், இந்த விவகாரத்தில் கடுமையான குற்றச்சாட்டை வைத்திருந்தார். கில்லுக்கு பத்து வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதில் ஒன்றில் மட்டும் அவர் நன்றாக விளையாடிவிட்டு தப்பித்துக் கொள்கிறார் என்று விமர்சித்து இருந்தார்.

இதன் மூலம் தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு மாதிரி நியாயமும் மற்ற மாநில வீரர்களுக்கு வேறு மாதிரி நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது என்று குற்றச்சாட்டு நிலவுகிறது. இந்த நிலையில் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் இன்று கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டிருந்தார். அப்போது பேசுவதற்கு முன்பு இங்கு எந்த மொழியில் பேசட்டும் என்று கூறினார். அதற்கு தமிழ் என்று சொன்னவுடன் சத்தம் எகிறியது.இதனை தொடர்ந்து அஸ்வின், ஹிந்தி இங்கு எத்தனை பேர் பேசுவீர்கள் என்று கேட்டவுடன் மயான அமைதியானது.

இதனை தொடர்ந்து பேசும்போது ஹிந்தி வெறும் அலுவல் மொழிதான் அது. நமது தேசிய மொழி கிடையாது என்று அஸ்வின் கூறினார். கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியலில் தமிழக சட்டமன்றம் தொடர்பான மரபுகள் காக்கப்பட வேண்டும் என பேசப்பட்டு வரும் நிலையில் தற்போது தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வினும் தன்னுடைய கேரம் பால் ஒன்றை வீசி இருக்கிறார். அஸ்வினின் இந்த பேச்சு தற்போது சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.

Story first published: Thursday, January 9, 2025, 21:54 [IST]
Other articles published on Jan 9, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+