For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வாய்ப்பு இல்ல ராஜா.. அஸ்வினை இனி வெளியே உட்கார வைக்க முடியாது.. காரணம் இது தான்

துபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் வாழ்வா? சாவா ஆட்டத்தில் இன்று இந்திய அணி, இலங்கையுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

Recommended Video

IND vs SL போட்டியில் Deepak Hooda விக்கெட் Tension ஆன Rohit Sharma *Cricket

சூப்பர் 4 சுற்றில், பாகிஸ்தானுடன் இந்தியா அதிர்ச்சி தோல்வியை தழுவிய நிலையில், இன்று இலங்கையுடன் மோத உள்ளது.

பாகிஸ்தானுடன் ஏற்பட்ட தோல்விக்கு இந்தியாவின் தவறான பிளேயிங் லெவனே காரணம் என்ற விமர்சனங்களும் எழுந்தன.

தோல்விக்கான காரணம்

தோல்விக்கான காரணம்

இந்திய அணியில் இடது கை பேட்ஸ்மேன்கள் இல்லை என்ற காரணத்தால், தினேஷ் கார்த்திக்கை நீக்கிவிட்டு, ரிஷப் பண்டை அணியில் சேர்த்தனர். ஆனால், அவரோ 12 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து ரசிகர்களை வெறுப்பேற்றினார். இதே போன்று ஜடேஜாவுக்கு மாற்றாக அணியில் கொண்டு வரப்பட்ட அக்சர் பட்டேலும், பிளேயிங் லெவனில் சேர்க்கப்படவில்லை.

கடைசியில் பேட்ஸ்மேன்

கடைசியில் பேட்ஸ்மேன்

இந்த நிலையில், தமிழக சுழற்பந்துவீச்சாளரான அஸ்வினும், பிளேயிங் லெவனில் களமிறங்க வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை தந்தது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பேட்டிங் செய்யும் போது, கடைசி ஓவர்களில் பேட்டிங் தெரிந்த பவுலர்கள் இல்லாத நிலை ஏற்பட்டது.

அஸ்வின் சிறப்பு

அஸ்வின் சிறப்பு

தற்போது இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் அஸ்வின் கண்டிப்பாக விளையாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இலங்கை அணியில் 3 இடதுகை வேகப்பந்துவீச்சாளர் உள்ளனர். இவர்களை எதிர்கொள்ள அஸ்வினே சரியான பந்துவீச்சாளர். மேலும் இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அஸ்வின் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்.

யாருக்கு பதிலாக

யாருக்கு பதிலாக

இதனால் பிளேயிங் லெவனில் அஸ்வின் இடம்பெற வாய்ப்புள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சாஹல் ரன்களை வாரி வழங்கினார். ஆனால், அவரை போலவே பந்துவீச கூடிய பிஸ்னாய் கொஞ்சம் கட்டுகோப்பாக செயல்பட்டார். இதனால், சாஹலுக்கு பதில் அஸ்வின் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது.

Story first published: Tuesday, September 6, 2022, 18:51 [IST]
Other articles published on Sep 6, 2022
English summary
R Ashwin may get chance to play against SL வாய்ப்பு இல்ல ராஜா.. அஸ்வினை இனி வெளியே உட்கார வைக்க முடியாது.. காரணம் இது தான்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+