Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL தொடரில் பிளாக்லிஸ்ட் ஆகும் அஸ்வின்? வாயை மூடிகிட்டு சும்மா இருந்திருக்கலாம்.. 10 அணிகளும் முடிவு

சென்னை: தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வினை பிளாக்லிஸ்ட் செய்ய ஐபிஎல் அணிகள் முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அஸ்வின் ஏற்கனவே ஓய்வு பெற்ற நிலையில், தற்போது ஐ பி எல், டிஎன்பிஎல் தொடரில் மட்டும் அவர் விளையாடி வருகிறார்.

இந்த நிலையில் அஸ்வினை கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. வரும் செப்டம்பர் 17ஆம் தேதி வந்தால் அஸ்வினுக்கு 39 வயது ஆகிவிடும். ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் ஒன்பது போட்டிகளில் 75 லட்சம் ரூபாய்க்கு தேர்வு செய்யப்பட்ட அஸ்வினும் பெரிய அளவு சோபிக்கவில்லை.

R Ashwin

நடந்து முடிந்த சீசனில் வெறும் ஒன்பது போட்டியில் மட்டுமே விளையாடிய அஸ்வின் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தினார். பேட்டிங்கில் வெறும் 33 ரன்கள் மட்டுமே அவர் அடித்திருந்தார். இதனால், ஏற்கனவே அஸ்வினை நீக்கும் முடிவில் தான் சிஎஸ்கே அணி இருந்தது. ஆனால் அஸ்வின் தேவையில்லாமல் தனது youtube பக்கத்தில் பல விஷயங்களை பேசி வருவது பல்வேறு அணிகளுக்கும் தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது.

குறிப்பாக சிஎஸ்கே அணி பிரவிசை கூடுதல் விலை கொடுத்து வாங்கியதாக கூறி சர்ச்சை ஏற்படுத்தினார். இது சிஎஸ்கே அணிக்கு பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே சிஎஸ்கே அணி ஸ்பாட் பிக்சிங் புகாரில் சிக்கி இரண்டு ஆண்டுகள் தடை பெற்ற நிலையில் தற்போது ஐபிஎல் விதிகளை மீறியதாக அஸ்வின் சொன்ன கருத்துக்கள் மூலம் மீண்டும் குற்றம் சாட்டப்பட்டது.

இதனால் சிஎஸ்கே அணி கடும் கோபத்தில் இருக்கிறது. இதை எடுத்து அஸ்வினை பிளாக் லிஸ்ட் செய்ய சிஎஸ்கே அணி முடிவு எடுத்திருக்கிறது. இதன்மூலம் வரும் மெகா ஏலத்தில் அஸ்வினை சிஎஸ்கே அணி எடுக்காது. அஸ்வின் யூடியூப் சேனலில் தொடர்ந்து இதே போல் உலறி வருவதால் அது எப்படியும் மற்ற அணிகளுக்கும் ஆபத்து ஏற்படுத்தும் என்பதால் மற்ற ஒன்பது அணிகளும் அஸ்வினை இனி ஏலத்தில் எடுக்கக் கூடாது என்ற முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது.

அது மட்டும் இல்லாமல் அஸ்வினுக்கு வயதும் ஆகிவிட்டதால் அவரை ஏலத்தில் தேர்வு செய்வது சரியான ஒரு விஷயமாக இருக்காது. அதுமட்டுமில்லாமல் அஸ்வினை பயிற்சியாளர் குழுவில் கூட சேர்க்க கூடாது என்றும், அவ்வாறு சேர்த்தால் அணியில் இருக்கும் ரகசியத்தை எல்லாம் அவர் வீடியோவில் சொல்லிவிடுவார் என்ற அச்சமும் அணிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அஸ்வினின் கதை முடிய போகிறது.

Story first published: Sunday, August 17, 2025, 11:54 [IST]
Other articles published on Aug 17, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+