ராஜ்காட் : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை தற்போது அஸ்வின் வீழ்ந்திருக்கும் நிலையில் அவருடைய டெஸ்ட் பயணம் எங்கிருந்து எப்போது ஆரம்பித்தது என்று கதை உங்களுக்கு தெரியுமா? அணில் கும்ப்ளே வயது மூப்பு காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஓய்வு பெற்றார்.
அப்போது இரண்டாவது சுழற் பந்துவீச்சாளராக இருந்த ஹர்பஜன் முன்னிலைப்படுத்தப்பட்டார். இந்த தருணத்தில் ஹர்பஜனுக்கு, ஓஜா, மிஸ்ரா போன்ற சுழற் பந்துவீச்சாளர்கள் கை கொடுத்தனர். எனினும் ஹர்பஜனுக்கு மாற்றாக அப்போதுதான் அஸ்வின் உள்ளூர் கிரிக்கெட்டில் வளர்ந்து வந்தார்.

ஐபிஎல் தொடரில் தன்னுடைய திறமையை அஸ்வின் வெளிப்படுத்திய நிலையில் ரஞ்சி கோப்பை, திலீப் கோப்பையிலும் இந்தியா ஏ தொடர் போன்ற தொடர்களிலும் அஸ்வின் ஜொலிக்க ஆரம்பித்தார். இதனால் 2010 ஆம் ஆண்டு சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் அறிமுகமான அஸ்வின், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு ஆண்டு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
தன்னுடைய முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியை டெல்லியில் 2011 ஆம் ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி அஸ்வின் தொடங்கினார். சுமார் 13 ஆண்டுகளாக அஸ்வின் தற்போது இந்தியாவின் நம்பர் ஒன் ஸ்பின்னர் என்ற பெயரை பெற்றிருக்கிறார். மேலும் ஐசிசி தரவரிசை பட்டியலில் நம்பர் ஒன் இடத்தில் அஸ்வின் பெற்ற வரலாறு இருக்கிறது. இந்த நிலையில் அஸ்வின் முதல் விக்கெட் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் டேரன் பிராவோதான்.
அதன்பிறகு அஸ்வின் 100வது விக்கெட்டும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் டேரன் சமி, 200 வது விக்கெட் நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன், அஸ்வினின் 300வது விக்கெட் இலங்கை வீரர் லக்கிரு கமாகே, அஸ்வினின் 400 வது விக்கெட் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோப்ரா ஆச்சர் அஸ்வினின் 500-வது விக்கெட் இங்கிலாந்து வீரர் ஜாக் கிராலி, இந்த மைல்கல் மேலும் தொடர்ந்து 600, 700 விக்கெட்டுகளை தொட வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. தற்போது அஸ்வினுக்கு 37 வயது ஆகிறது. அவர் தன்னுடைய உடல் தகுதியை சிறப்பாக கையாண்டு. இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடினால் கூட ரெக்கார்டு முறியடிக்க முடியும்.