For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சரித்திரத்தில் இடம்பிடிக்க போகும் அஸ்வின்.. இன்னும் 3 விக்கெட் தான் தேவை.. WI டெஸ்டில் சாதிப்பாரா?

டோமினிக்கா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் நிலை வீரராக விளங்கும் அஸ்வின் வெஸ்ட் இண்டீஸ் எதிரான முதல் டெஸ்டில் மீண்டும் ஒரு சாதனையை படைக்கும் தருவாயில் இருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் அணியின் அனுபவம் வாய்ந்த வீரராக விளங்கும் அஸ்வின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பிளேயிங் லெவனில் இடம்பெறாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

R Ashwin needs 3 wickets to reach biggest milestone in his carrier

இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அஸ்வினுக்கு முன் உரிமை வழங்கப்படும் என தெரிகிறது. இந்த நிலையில் அஸ்வின் ஒரு மகத்தான சாதனையை எதிர்நோக்கி இருக்கிறார். இதுவரை 92 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின், 474 விக்கெட்களையும்,113 ஒரு நாள் கிரிக்கெட்டில் விளையாடி 151 விக்கெட்டுகளையும், 65 டி20 கிரிக்கெட்டில் விளையாடி 72 விக்கெட்டையும் வீழ்த்தி இருக்கிறார்.

இதன் மூலம் ஒட்டு மொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் அஸ்வின் 270 போட்டிகளில் விளையாடி 697 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இந்த நிலையில் 36 வயதான அஸ்வின் வெஸ்ட் இண்டீஸ் எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினால் சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெறுவார்.

R Ashwin needs 3 wickets to reach biggest milestone in his carrier

ஏற்கனவே இந்திய வீரர்கள் தரப்பில் 43 போட்டிகளில் விளையாடி 956 விக்கெட்டுகளையும் ஹர்பஜன் சிங் 444 போட்டிகளில் விளையாடி 711 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார். ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் முரளிதரன் 1347 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்திலும், வார்னே 1001 விக்கெட்டுகளை கைப்பற்றி இரண்டாவது இடத்திலும், ஆண்டர்சன் 975 விக்கெட்டுகளை எடுத்து மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

இந்தப் பட்டியலில் அஸ்வின் தற்போது 17வது இடத்தில் இருக்கிறார். அஸ்வினுக்கு முன்பாக ஸ்டெயின் 699 விக்கெட்டுக்களுடனும், விட்டோரி 705 விக்கெட்களுடனும், ஹர்பஜன்சிங் 711 விக்கெட்டுகளுடன் உள்ளனர். இந்தத் தொடரில் அஸ்வின் குறைந்தது 15 விக்கெட்டுகளை வீழ்த்தினால் ஹர்பஜன் சிங்கை முந்தி 14 ஆம் இடத்திற்கு செல்ல வாய்ப்பு உள்ளது.

Story first published: Tuesday, July 11, 2023, 16:18 [IST]
Other articles published on Jul 11, 2023
English summary
R Ashwin needs 3 wickets to reach biggest milestone in his carrier
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+