பயிற்சி ஆட்டத்தில் அஸ்வின் அபார பந்துவீச்சு.. எதிர்கொள்ள முடியாமல் திணறிய ஆஸி வீரர்கள்.. முழு விவரம்
பெர்த் : 2022 டி20 உலககோப்பை தொடருக்காக இந்திய அணி தற்போது பெர்த் நகரில் முகாமிட்டு பயிற்சி செய்து வருகிறது.
முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா வென்ற நிலையில், 2வது பயிற்சி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் விராட் கோலிக்கும், சூர்யகுமார் யாதவுக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசியது. இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி கேப்டனாக ராகுல் செயல்பட்டார்.

அனல் பறந்த வேகம்
ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ஆர்ஸ்தீப் சிங் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனைத் தொடர்ந்து பவர்பிளேவில் ஹர்திக் பாண்டியா பந்தவீச வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் அவர் அதிவேகமாக பவுண்சர்களை வீசி நெருக்கடி அளித்தாலும், வெஸ்டர்ன் ஆஸ்திரேலிய வீரர்கள் ரன்களை குவித்து, அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

பவர்பிளே முடிவு
இதன் மூலம் பவர்பிளே முடிவில் வெஸ்டர்ன் ஆஸ்திரேலிய அணி 54 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்தது. அதன் பிறகு தான் ஹர்சல் பட்டேலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதன் மூலம் ஹர்சலை மிடில் இன்னிங்சில் இந்தியா பயன்படுத்த முனைவதாக தெரிகிறது. வெஸ்டர்ன் ஆஸ்திரேலிய அணியின் ஹாப்சன் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார்.

அஸ்வின் அபாரம்
டார்சி சார்ட் தன் பங்கிற்கு அரைசதம் கடக்க, சிறப்பாக விளையாடிய ஹாப்சன் 64 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்சல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 13 ஓவர் முடிவில் வெஸ்டர்ன் ஆஸ்திரேலிய அணி 125 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. தமிழக வீரர் அஸ்வின் 17வது ஓவரில் தனது முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்தினார். இதே போன்று அடுத்த பந்திலும் சாம் ஃபென்னிங்கை எல்பிடபியூள் ஆக்கினார்.

யாருக்கு எத்தனை விக்கெட்
எனினும் ஹாட்ரிக்கை தவறவிட்டாலும், அதே ஓவரில் அஸ்வின் 3வது விக்கெட்டை வீழ்த்த, வெஸ்டர்ன் அணி ஆஸ்திரேலிய அணி தடுமாறியது. 18வது ஓவரில் ஆர்ஸ்தீப் 6 ரன்களை விட்டு கொடுக்க, புவனேஸ்வர் குமார் 19வது ஓவரில் 7 ரன்களை மட்டுமே கொடுத்தார். எனினும் 20வது ஓவரில் ஹர்சல் 15 ரன்களை வழங்க,வெஸ்ட்ர்ன் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. இந்திய வீரர்கள் தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டும், ஹர்சல் 2 விக்கெட்டும்,ஆர்ஸ்தீப் சிங் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.


Click it and Unblock the Notifications