Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸி இங்கு தான் கோட்டை விட்டாங்க.. தோல்விக்கு காரணமும் இது தான் அஸ்வின் கருத்து

நாக்பூர் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 400 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து இந்திய அணி 400 ரன்கள் விளாசி பதிலடி கொடுத்தது. 223 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 91 ரன்களில் சுருண்டது. இது இந்திய மண்ணில் ஆஸ்திரேலியாவின் குறைந்தபட்ச ஸ்கோராகும்.

முதல் இன்னிங்சில் ஜடேஜா 5 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும் வீழ்த்திய நிலையில், 2வது இன்னிங்சில் அஸ்வின் 5 விக்கெட்டும், ஜடேஜா 2 விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.

நைட் வாட்ச்மேன் ஏன்

நைட் வாட்ச்மேன் ஏன்

இந்த நிலையில் வெற்றி பெற்றது குறித்து பேசிய அஸ்வின், 3வது நாள் அடுகளம் எப்படி செயல்படும் என்று உங்களுக்கு நன்றாகவே தெரியும் என்னுடைய பாராட்டு எல்லாம் பேட்ஸ்மேன்களுக்கு தான். நைட் வாட்ச்மேனாக பேட்டிங் களமிறங்கியது என்னுடைய முடிவு தான். நான் பேட்டிங் செய்ய செல்கிறேன் என்று கூறினேன். அதற்கு புஜாராவும், டிராவிட்டும் ஒப்பு கொண்டார்கள்.

அதிர்ஷ்டம்

அதிர்ஷ்டம்

ஜடேஜாவுடன் இணைந்து பந்துவீசியது எனக்கு நல்ல உதவியாக அமைந்தது. ஜடேஜா ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர். அவர் என்னுடைய பார்ட்னராக அமைந்தது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என நினைக்கிறேன். அதே போன்று அக்சர் பட்டேலும் திறமை வாய்ந்த பந்துவீச்சாளர். எங்கள் 3 பேருக்கும் பேட்டிங் நன்றாகவே தெரியும்.

யுத்திகளை மாற்றுவார்கள்

யுத்திகளை மாற்றுவார்கள்

ஆஸ்திரேலிய அணியை பொறுத்த வரை உலகத்தரம் வாய்ந்த அணி. அவர்கள் எப்படியும் பிளான் பியை வைத்திருப்பார்கள்.அடுத்த டெஸ்ட் போட்டியில் இன்னும் வீரியமாக விளையாடி எங்களுக்கு நெருக்கடி தருவார்கள். தாம் என்ன தவறு செய்தோம் என்று சுய பரிசோதனை செய்து கொண்டு யுத்திகளை மாற்றி கொள்வார்கள் என நினைக்கிறேன்.

ஆஸி செய்த தவறு

ஆஸி செய்த தவறு

என்ன நடக்குமோ என்று ஆஸ்திரேலியா மிகவும் யோசித்ததே அவர்கள் செய்த தவறாக நினைக்கிறேன். முதலில் பறக்காமல் நின்று யோசிக்க வேண்டும். நாம் பல விசயங்களை பற்றி யோசிக்கும் போது, கண் முன் நடக்கும் விசயம் குறித்து கோட்டை விட்டு விடுவோம். அடுத்த போட்டி நிச்சயம் அவ்வளவு எளிதாக இருக்காது. ஆஸ்திரேலியாவின் பேட்டிங்கும் ஆழமாக இருக்கிறது. ரோகித் சர்மாவின் திட்டங்களுக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறேன் என்று கூறினார்.

Story first published: Saturday, February 11, 2023, 16:09 [IST]
Other articles published on Feb 11, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+