சென்னை : உலகின் முதல் நிலை கிரிக்கெட் வீரராக டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் அஸ்வின் விளங்கி வருகிறார். 36 வயதான அஸ்வின் உலகத்தில் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பிளேயிங் லெவனில் இடம் பெறாமல் போனது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அஸ்வின் தம் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து பேசியிருக்கிறார். இதனை தற்போது பார்க்கலாம். என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் நான் என்ன செய்திருக்கிறேன் என்பதை நினைத்து பெருமை கொள்கிறேன்.

நான் எடுத்த ரன்கள் மற்றும் விக்கெட்டுக்காக பெருமை கொள்ளவில்லை. தொடர்ந்து என்னையே நான் எப்படி புதுப்பித்துக் கொள்கிறேன் என்பதற்காக தான் பெருமை கொள்கிறேன். கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு பிரச்சனை இருக்கிறது. அவர்கள் வயதான பிறகு இனி கிரிக்கெட்டில் நாம் ஓரங்கட்டப்படுவோம் என்ற பாதுகாப்பு இன்மை தோன்றும். என்னை பொறுத்தவரை கிரிக்கெட் வீரர்கள் இந்த எண்ணத்தில் சிக்கிக் கொள்கிறார்கள்.
மூத்த வீரர்களுக்கு அனுபவம் இருக்கும்போது நமக்குத் தெரிந்த சில விஷயத்தை கட்டியாக பிடித்துக் கொள்கிறார்கள்.ஆனால், அது நம் கழுத்தை கூட நெறித்து உடைத்து விடும். வங்கதேச தொடரை விட்டு நான் வந்தவுடன் என் மனைவியிடம் சொன்னது இது தான். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடர் என்னுடைய கடைசி போட்டியாக இருக்கும். ஏனென்றால் எனக்கு கால் முட்டியில் தாங்க முடியாத வலி இருக்கிறது. இப்போது நான் பந்து வீசும் முறையால் என் காலில் அதிகம் அழுத்தம் ஏற்படுகிறது.
இதிலிருந்து நான் விடுபட என்னுடைய பந்துவீச்சு முறையை நான் மீண்டும் மாற்ற வேண்டும். டி20 உலக கோப்பைக்கு பிறகு நான் பெரிய அளவில் எந்த பயிற்சியும் செய்யவில்லை. நான் எப்படி வீசுகிறோமோ அதை போல் இருக்கட்டும் என்று நான் நினைத்துக் கொண்டேன். ஆனால் வங்கதேச தொடரில் இரண்டாவது டெஸ்டில் எனக்கு தாங்க முடியாத வலி ஏற்பட்டது.
முட்டி பகுதியில் கால் வீங்கி விட்டது. நான் அப்போது கடந்த நான்கு ஆண்டுகளாக நாம் சிறப்பாக விளையாடியிருக்கிறோம். இதனால் ஏற்பட்ட வலி தான் இது என்று நினைத்துக் கொண்டேன். இந்த காலகட்டத்தில் என்னுடைய பந்துவீச்சு முறையை மாற்றினால் நான் செய்வதிலே மிகவும் முட்டாள்தனமான காரியம் எதுவாக தான் இருக்கும் என்று நினைத்தேன்.
ஆனால் காலில் அழுத்தம் கொடுப்பதால் தான் இந்த வலி ஏற்படுகிறது. எனவே இந்த பந்து வீசும் முறையை மாற்றும் வலி தவிர எனக்கு வேறு வழி இல்லை என்று கூறி 2013 14 ஆம் ஆண்டு நான் எப்படி பந்து வீசினேனோ, அந்த முறைக்கு சென்று விட்டேன். இதற்காக பெங்களூர் சென்று வலிக்கு ஊசியை போட்டுக் கொண்டேன். அதன் பிறகு தொடர்ந்து நான்கு நாட்களில் என்னுடைய பழைய பந்து வீசும் முறைக்கு நான் வந்து விட்டேன்.
இதன்பிறகு முதல் டெஸ்ட் போட்டியில் நான் முதல் மூன்று ஓவர் வீசும் போது கொஞ்சம் கடினமாக இருந்தது. ஆனால் இந்த தொடரில் நான் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி தொடர் நாயகன் விருதை பெற்றேன். என் வாழ்நாளில் விளையாடியதில் சிறந்த தொடர்களில் அதுவும் ஒன்று கடைசியாக 5 ஆண்டுகளில் நான் களத்தில் சிறப்பாகவே செயல்பட்டு இருக்கிறேன்.
36 வயதில் யாரும் பந்து வீசும் முறையை மாற்றி தங்களுடைய கிரிக்கெட் வாழ்க்கையை கெடுத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் என் பயத்தையும் மீறி நான் வெற்றி பெற்று இருக்கிறேன். இதே பந்து வீசும் முறையை வைத்து என்னால் அடுத்த நாள் போட்டிகளில் விளையாடி 15 , 16 விக்கெட்டுகளை எடுக்க முடியும் என்று அஸ்வின் கூறியுள்ளார்.