Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணி முதுகில் குத்தினாரா அஸ்வின்? முகத்திற்கு நேராக கேள்வி கேட்ட டிராவிட்.. பதறிய ஸ்பின் கிங்

சென்னை: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் கும்பளேவுக்கு பிறகு அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்று பெருமையை அஸ்வின் பெற்றிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் பேட்டிங்கிளும் 3503 ரன்கள் அடித்துள்ள அஸ்வின், மொத்தமாக ஆறு சதம், 14 ஆறு சதம் அடித்து உள்ளார்.

தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை தொடக்க வீரராக ஆரம்பித்த அஸ்வின் பின்னர் சுழற்பந்துவீச்சில் கவனம் செலுத்தி உலகப் புகழ்பெற்றார். இந்த நிலையில் அஸ்வின் தனது youtube சேனலில் ராகுல் டிராவிட் உடன் ஒரு உரையாடல் நடத்தினார்.

R Ashwin Rahul Dravid

அப்போது ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருந்தபோது அஸ்வின் செய்த ஒரு விஷயத்தை நினைவுகூர்ந்து, அவர் முகத்துக்கு நேராக கேள்வி கேட்டதால் அஸ்வின் பதறி போனார். ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருந்தபோது 2023 ஆம் ஆண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் ஒரு சம்பவம் நடந்தது. அதில் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு சுழற் பந்துவீச்சை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து அஸ்வின் பயிற்சி அளித்ததாக ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது.

இதனை சுட்டிக்காட்டி தற்போது ராகுல் டிராவிட் கேள்வி ஒன்றை அவரிடம் எழுப்பினார். பயிற்சியாளராக நான் இருந்தபோது எனக்கு ஒரு வீடியோ வந்தது. அதில், நீங்கள் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு கோச்சிங் செய்து கொண்டிருந்தீர்கள். அது தமிழில் இருந்தது. நீங்கள் தமிழில் பேசிக் கொண்டிருந்தீர்கள். எனக்கு தமிழ் கொஞ்சம் தெரியும் என்பதால், அங்கு என்ன நடந்தது என்று எனக்குப் புரிந்தது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் நடுவே நீங்கள் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு சுழற்பந்துவீச்சை எவ்வாறு எதிர்கொண்டு ரன் சேர்ப்பது என சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள். அதை பார்த்தபோது அஸ்வின் இன்னும் தொடர் முடியவில்லை. என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று எனக்கு நினைக்கத் தோன்றியது.

இந்த கேள்வியால் பதறிப் போன அஸ்வின், சமாளித்துக் கொண்டு எனக்கு சுழற் பந்துவீச்சை எதிர்கொள்ள தெரிந்தால் நான் ஏன் ஆஸ்திரேலிய வீரர்களிடம் இதை சொல்லிக் கொடுக்கப் போகிறேன். நமது வீரர்களுக்கு அல்லவா நான் சொல்லிக் கொடுத்திருப்பேன் என்று கூறினார். உடனே டிராவிட் இல்லை, இல்லை நான் காமெடிக்காக தான் சொல்கின்றேன்.

ஆனால் பலரும் என்னிடம் வந்து அஸ்வின் உங்களைவிட நன்றாக சொல்லித் தருகிறார் என்று கூறினார்கள் என டிராவிட் தெரிவித்தார். இதை அடுத்து, அப்போது என்ன நடந்தது என்பது குறித்து அஸ்வின் மீண்டும் ஒருமுறை விளக்கினார். போட்டியின் போது ஸ்டார்க், என்னிடம் வந்து பவுசர் பந்தை எவ்வாறு எதிர்கொள்வது என உங்களுக்கு நான் சொல்லித் தரட்டுமா என்று கேட்டார்.அதுதான் நடந்தது என்று அஸ்வின் கூறினார்.

இதற்கு பதில் அளித்த டிராவிட், நீங்கள் தமிழில் பேசினீர்கள். ஆஸ்திரேலிய வீரர்களுக்கு தமிழ் தெரியும் என்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது. ஒருவேளை வேறு ஏதாவது தமிழ் பையன் அங்கு இருந்து நீங்கள் சொல்லிக் கொடுத்ததை ஆஸ்திரேலிய வீரர்களுக்கு மொழிபெயர்ப்பு செய்திருக்கலாம் என்று கூறினார். அதற்கு அஸ்வின் இல்லை நாங்களே சப் டைட்டில் போட்டு தான் வீடியோவை வெளியிடுவோம் என்று உரையை முடித்தார்.

Story first published: Friday, August 22, 2025, 11:17 [IST]
Other articles published on Aug 22, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+