Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சண்ட போட்றத முதலில் நிறுத்துங்கப்பா.. நம்ம எல்லாம் ஒரே நாடு.. 2K கிட்ஸ்களுக்கு அஸ்வின் அறிவுரை

சென்னை : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தேர்வு செய்யப்பட்டதில் பல குறைகள் உள்ள நிலையில் அதற்கு ரசிகர்கள் கடுமையாக மோதிக் கொண்டு வருகிறார்கள். குறிப்பாக சஞ்சு சாம்சன் இந்திய அணியில் தேர்வு செய்யப்படாததற்கு அவருடைய ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் விராட் கோலி ஏதேனும் கேட்சை விட்டால் ரோகித் சர்மா அவரை கிண்டல் செய்வதும் ரோகித் சர்மா ரன் அடிக்காவிட்டால் கோலி ரசிகர்கள் அவருக்கு கிண்டல் செய்வதும் என நாமெல்லாம் ஒரே அணி என்பதை இந்திய ரசிகர்கள் மறந்து விட்டார்கள்.

R Ashwin request to pause fan fights for 2 months durig world cup

இந்த நிலையில் அஸ்வின் தமது யூடியூப் சேனலில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில் இன்னும் இரண்டு மாதத்திற்கு தங்களுக்கு பிடித்த வீரர்களுக்காக சண்டை போடுவதை இரண்டு மாதத்திற்கு நிறுத்தி வையுங்கள். இந்த உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு உங்களுடைய முழு ஆதரவையும் தெரிவியுங்கள். இது இஷான் கிசனுக்கும் சஞ்சு சம்சனுக்கும் இடையிலான போட்டி கிடையாது.

இஷான் கிஷனால் பல ரோல்களை செய்ய முடியும். உங்களால் 15 பேர் கொண்ட அணியை தான் தேர்வு செய்ய முடியும். இதில் இஷான் கிஷணால் விக்கெட் கீப்பராகவும் இருக்க முடியும். தொடக்க வீரராகவும் விளையாட முடியும். நடு வரிசையிலும் தற்போது இஷான் கிஷன் வெற்றியை பெற்றிருக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் இசான் கிஷனை சேர்த்தால் தான் இரண்டு இடது கை பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். இதனால்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது ஒரு ரஞ்சிக்கோப்பை காண அணியை தேர்வு செய்யும் போது இரண்டு விக்கெட் கீப்பர்கள் இருக்கும் படி அணியை தேர்வு செய்வார்கள். இது உலகக்கோப்பை அணி என்பதை மறந்து விடக்கூடாது.

இடதுகை பேட்ஸ்மேன் என்பதால்தான் இசான் கிஷனுக்கு கூடுதலான சாதகம் கிடைத்திருக்கிறது. இதனால் ஒவ்வொரு வீரர்களும் தேர்வு செய்யும் போதும் பல விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும். இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு நாம் இந்திய அணிக்கு முழு ஆதரவை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என அஸ்வின் கூறியுள்ளார்.

Story first published: Thursday, September 7, 2023, 17:52 [IST]
Other articles published on Sep 7, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+