Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Ashwin- ஒவ்வொரு நாட்டுக்கு எதிராகவும் அஸ்வின் எடுத்த விக்கெட்டுகள்.. முதலிடத்தில் எந்த அணி தெரியுமா?

மும்பை : அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அஸ்வின் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்திய அணிக்காக 106 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 537 விக்கெட்டுகளும், 116 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடி 156 விக்கெட்களும், 65 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 72 விக்கெட்டுகளையும் அஸ்வின் வீழ்த்தி இருக்கிறார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அணில் கும்ப்ளேவுக்கு பிறகு அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ள அஸ்வின், சர்வதேச அளவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஏழாவது இடத்தை பிடித்திருக்கிறார்.

ravichandran ashwin ashwin retirement r ashwin

38 வயதான அஸ்வின் ஒவ்வொரு நாட்டுக்கு எதிராகவும் எவ்வளவு விக்கெட்டுகளை வீழ்த்திருக்கிறார் என்பதை தற்போது பார்க்கலாம். அஸ்வின் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். வங்கதேசத்துக்கு எதிராக எட்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 34 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

தென்னாபிரிக்காவுக்கு எதிராக அஸ்வின் 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 57 விக்கெட்டுகளையும், இலங்கை அணிக்கு எதிராக 11 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 62 விக்கெட்டுகளையும் அஸ்வின் வீழ்த்தி இருக்கிறார். அஸ்வின் தன்னுடைய சர்வதேச கிரிக்கெட் போட்டியை முதன்முதலாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தான் விளையாடினார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 13 டெஸ்ட் போட்டி விளையாடியுள்ள அஸ்வின் 75 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்.

இதேபோன்று நியூசிலாந்துக்கு எதிராக 12 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 75 விக்கெட் கைப்பற்றியுள்ள அஸ்வின், இங்கிலாந்துக்கு எதிராக 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 114 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 23 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 115 விக்கெட்களை அஸ்வின் வீழ்த்தி உள்ளார். இதேபோன்று ஆஸ்திரேலிய மண்ணில் 40 டெஸ்ட் விக்கெட்டுகளை அஸ்வின் கைப்பற்றியுள்ளார்.

வங்கதேசத்தில் 12 விக்கெட்களும், இங்கிலாந்தில் 18 விக்கெட்களும், நியூசிலாந்தில் மூன்று விக்கெட்டுகளும், தென்னாப்பிரிக்காவில் 11 விக்கெட்களும்,இலங்கையில் 38 விக்கெட்களும், வெஸ்ட் இண்டீஸ் 32 விக்கெட்டுகளும், இந்திய மண்ணில் 383 விக்கெட்களையும் அஸ்வின் வீழ்த்தியிருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 65 போட்டிகளில் சொந்த மண்ணில் விளையாடியுள்ள அஸ்வின் 383 விக்கெட்டுகளையும், வெளிநாடுகளில் 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 150 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கிறார். அதிகபட்சமாக 2016 ஆம் ஆண்டு அஸ்வின் 12 டெஸ்ட்களில் விளையாடி 72 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Story first published: Wednesday, December 18, 2024, 17:21 [IST]
Other articles published on Dec 18, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+