Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Ashwin- உங்களை பார்த்து பிரமித்தேன்.. அஸ்வின் ஓய்வுக்கு சச்சின் முதல் கார்த்திக்,ரெய்னா வரை வாழ்த்து

சென்னை : உலகில் தலைசிறந்த சுழற் பந்துவீச்சாளரான தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதனால் அஸ்வினுக்கு உலகம் முழுவதும் உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அவருக்கு பிரியா விடை அளித்து வருகின்றனர்.

இது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட்டை நீங்கள் உள்ளத்தாலும் அறிவாலும் ஒருங்கிணைந்து எதிர்கொள்ளும் விதத்தைப் பார்த்து நான் பிரமித்து போய் இருக்கின்றேன். கேரம் பாலில் இருந்து பேட்டிங்கில் முக்கியமான ரன்கள் அடித்து பலமுறை அணிக்கு வெற்றி தேடித் தந்திருக்கிறீர்கள்.

ravichandran ashwin ashwin retirement r ashwin

திறமையான இளம் வீரர் என்ற பெயரை வாங்கியதில் இருந்து இந்தியாவின் சிறந்த மேட்ச் வின்னர் ஆகிய உங்கள் வளர்ச்சியை நான் கண்டு களித்திருக்கின்றேன். உங்களுடைய இந்த கிரிக்கெட் பயணம் பலரையும் ஊக்குவிக்கும். உங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸ்க்கு வாழ்த்துக்கள் என சச்சின் டெண்டுல்கர் பாராட்டுியுள்ளார்.

அஸ்வின் ஓய்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள விராட் கோலி, உங்களுடன் இணைந்து பயணித்த இந்த 14 ஆண்டுகள் மறக்க முடியாதது. நீங்கள் ஓய்வு பெற போகிறீர்கள் என்று சொன்னவுடன். அந்த 14 ஆண்டுகளும் என் கண் முன்னால் ஒரு பிளாஷ்பேக் போல் கூடியது. இந்திய அணிக்காக நீங்கள் செயல்பட்ட இடம் யாருக்கும் ஈடாகாது என்று பாராட்டியுள்ளார். அஸ்வின் குறித்து பதிவிட்டுள்ள பும்ராஉங்களுடன் ட்ரெஸ்ஸிங் ரூமை பகிர்ந்து கொண்டது எனக்கு மிகப்பெரிய கௌரவமாக கருதுகிறேன்.

களத்திற்கு உள்ளேவும், களத்திற்கு வெளியேவும் மிகச் சிறந்த வீரர். உங்களைப் பார்த்துதான் நான் வளர்ந்தேன். உங்களுடைய இந்த சிறந்த பயணத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள் என பும்ரா கூறியுள்ளார். தினேஷ் கார்த்திக் வெளியிட்டுள்ள பதிவில், ஆல் டைம் சிறந்த கிரிக்கெட் வீரர் ஓய்வு பெற்றிருக்கிறார். தமிழ்நாட்டில் இருந்து சென்று இந்திய அணிக்காக விளையாடியதில், மிகச் சிறந்த வீரர். நீங்கள் தான் உங்களுடன் இணைந்து விளையாடி நினைத்து நான் பெருமை கொள்கிறேன் என கூறி இருக்கிறார்.

அஸ்வின் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, உங்களுடைய சிறந்த கிரிக்கெட் வாழ்க்கைக்கு பாராட்டுக்கள். நான் பயிற்சியாளராக இருந்தபோது எங்கள் அணியின் மதிக்க முடியாத சொத்தாக நீங்கள் இருந்தீர்கள். உங்களுடைய திறமையின் மூலம் இந்த விளையாட்டை மேம்படுத்தினீர்கள். கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும் என வாழ்த்தியுள்ளார்.

இதேபோன்று தென் ஆப்பிரிக்கா வீரர் கிப்ஸ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், அதிக டெஸ்ட் கிரிக்கெட் வீழ்த்திய சுழற் பந்துவீச்சாளர்களில், பேட்டிங்கிலும் ஆறு சதம் அடித்தவர்கள் பட்டியலில் இவர் ஒருவர் மட்டும்தான் என்று பாராட்டி இருக்கிறார்.அஸ்வின் குறித்து கருத்து தெரிவித்த ஹர்பஜன் சிங், உங்களுடைய சிறந்த கேரியருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். ஒரு கிரிக்கெட் வீரராக நீங்கள் செயல்படும் விதத்தை நான் என்றுமே நேசித்திருக்கிறேன்.

இந்திய சுழற் பந்துவீச்சு தலைவராக பத்தாண்டுகளுக்கு மேல் செயல்பட்டு இருக்கிறீர்கள். உங்களுடைய சாதனைகளை நினைத்து நான் பெருமை கொள்கிறேன். மீண்டும் உங்களை களத்தில் காண்போம் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார். அஸ்வினுக்கு பாராட்டு தெரிவித்துள்ள அணில் கும்ப்ளே, உங்களுடைய இந்த கிரிக்கெட் பயணம் மிகச் சிறந்தது. 700 விக்கெட்டுகள் மேல் வீழ்த்தியுள்ள நீங்கள் கிரிக்கெட் அறிவிலும் சிறந்தவர்.கிரிக்கெட்டுக்கு வெளியிலும், உங்களுக்கு சிறந்த வாழ்க்கை அமையட்டும் என்று கூறியுள்ளார்.

அஸ்வின் குறித்து கருத்து தெரிவித்த பயிற்சியாளர் கம்பீர், இளம் வீரர்களில் இருந்து கிரிக்கெட் ஜாம்பவானாக நீங்கள் மாறிய பயணத்தை அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். உங்களை பார்த்து இன்னும் பல தலைமுறை வீரர்கள் கிரிக்கெட் களத்திற்கு வருவார்கள் என கூறியுள்ளார். அஸ்வின் குறித்து கருத்து தெரிவித்துள்ள ரகானே உங்கள் பந்துவீச்சில் ஸ்லீப்பில் நான் நிற்கும் போது ஒரு முறை கூட சோர்ந்து போனதில்லை. அனைத்து பந்தலுமே ஒரு விக்கெட் எடுக்கக்கூடிய வாய்ப்பாக இருந்தது.

உங்களுடைய அடுத்த அத்தியாயத்திற்கு வாழ்த்துக்கள் எனக் கூறியுள்ளார்.தமிழக வீரர் பத்ரிநாத் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இந்திய கிரிக்கெட் அணியில் சிறந்த தூதராக அஸ்வின் விளங்கி இருப்பதாக பாராட்டி உள்ளார்.ரெய்னா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் உங்களுக்கு நான் தலை வணங்குகிறேன். டெஸ்ட் கிரிக்கெட் இது நீங்கள் வைத்துள்ள பற்றுக்கு யாராலும் ஈடு செய்ய முடியாது.எங்களுக்கு எண்ணற்ற நல்ல நிகழ்வுகளை வழங்கியதற்கு மிக்க நன்றி என ரெய்னா கூறியுள்ளார்.

Story first published: Wednesday, December 18, 2024, 21:33 [IST]
Other articles published on Dec 18, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+