Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அஸ்வின் இடத்தை நிரப்ப போவது யார்? இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்புக்காக காத்திருக்கும் வீரர்கள்

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளரான அஸ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுதான் இந்திய அணியின் பந்துவீச்சில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட இருக்கிறது.

இந்திய அணி இனி சொந்த மண்ணில் விளையாடும் போது அஸ்வின் இல்லாத குறை ரசிகர்களால் இனி அடிக்கடி உணரப்படும். இந்த நிலையில் அஸ்வின் இடத்தை நிரப்ப வாய்ப்பு இருக்கும் மூன்று வீரர்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.

ravichandran ashwin ashwin retirement r ashwin

இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்திருப்பவர் வாஷிங்டன் சுந்தர். தமிழகத்தைச் சேர்ந்த 25 வயதான வாஷிங்டன் சுந்தர் ஏற்கனவே இந்திய அணிக்காக ஏழு டெஸ்ட், 22 ஒருநாள் மற்றும் 52 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். மேலும் வாஷிங்டன் சுந்தருக்கு தொடர் வாய்ப்பு கிடைக்காத நிலை ஏற்பட்டு இருந்தது. தற்போது அஸ்வின் வெளியேறியுள்ள நிலையில் வாஷிங்டன் சுந்தருக்கு நிரந்தர வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் 30 வயதாக இருக்கும் குல்தீப் யாதவ், இந்திய அணிக்காக 13 டெஸ்ட், 106 ஒரு நாள் மற்றும் 40 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். குல்தீப் யாதவ்க்கு போதிய வாய்ப்பு மற்றும் ஆதரவு இந்திய அணி நிர்வாகத்தால் வழங்கப்பட்டால் அவர் நிச்சயம் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகப்பெரிய வீரராக வருவார்.

இந்த பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்திருப்பவர் மானவ் சுதான். அஸ்வின் போலவே உயரம் இருந்தாலும் இவர் இடது கையில் சுழற் பந்து வீசக்கூடியவர். இதுவரை 21 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 86 விக்கெட்டுகளை வீழ்த்திருக்கிறார். இதுபோன்று பேட்டிங்களும் 663 ரன்கள் அடித்திருக்கிறார்.

இதில் நான்கு அரைசதம் அடங்கும்.இவர்கள் தவிர அக்சர் பட்டேலும் தனது வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் ஜடேஜாவை போலவே அக்சர் பட்டேலும், இடது கை சுழற்பந்து வீச்சாளர் என்பதால் அவருக்கு வாய்ப்பு கிடைப்பது கொஞ்சம் கடினமாகும்.

Story first published: Wednesday, December 18, 2024, 21:01 [IST]
Other articles published on Dec 18, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+