Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாவு பயத்த காமிச்சிட்டாங்க பரமா..!! திகிலை ஏற்படுத்திய அஸ்வின் விமான பயணம்.. என்ன நடந்தது?

சென்னை: தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் தமக்கு நிகழ்ந்த விமான பயணம் அனுபவம் குறித்து ரசிகர்களிடம் விவரித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் பேட்டிங்கில் கலக்கிய அஸ்வின், பந்துவீச்சில் குறைவான விக்கெட்டுகளையே எடுத்திருந்தார்.

மேலும், ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் அஸ்வின் பந்துவீச்சில் சொதப்பியதும், ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.

கடும் போட்டி

கடும் போட்டி

இதன் மூலம், இந்திய டி20 அணியில் அஸ்வின் தனது இடத்தை இழந்தார். அஸ்வினுக்கு சாஹல், குல்தீப், அக்சர் பட்டேல், சாய் கிஷோர் ,ஜடேஜா என கடின போட்டி நிகழ்ந்தாலும், டெஸ்ட் போட்டியில் அஸ்வின் தாம் நம்பர் 1 இடத்தில் இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் கும்ப்ளேவுக்கு பிறகு அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

சாதனை பயணம்

சாதனை பயணம்

இந்த நிலையில், அஸ்வின் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் தாம் வாழ்நாளில் மறக்க முடியாத விமான பயணம் அனுபவம் ஏற்பட்டதாக தெரிவித்தார். 2020ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய பயணத்தில் டெஸ்ட் போட்டியை வென்று இந்திய அணி சாதனை படைத்தது. இதில் அஸ்வினின் பங்கு மிகவும் முக்கியமானது.

கன மழை

கன மழை

அந்த தொடரில் இந்தியாவுக்காக அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் அஸ்வின் 2வது இடத்தை பிடித்திருந்தார். சரி விசயத்துக்கு வருவோம். அதில், நாங்கள் மெல்போர்னிலிருந்து சிட்னிக்கு விமானம் மூலம் சென்று கொண்டு இருந்தோம். அப்போது பயங்கர மழை பெய்துள்ளது. அந்த மழை காற்றில் எங்கள் விமானம் சிக்கியது.

பயத்தின் உச்சம்

பயத்தின் உச்சம்

விமானம் கடுமையாக ஆடியது. அப்போது பயத்தில் உச்சியில் நாங்கள் இருந்தோம், விமானம் தரையிறங்கப் போவது இல்லை என்பதை நான் உண்ர்ந்தேன். எல்லாம் போச்சு என்று நினைத்தேன்.ஆனால் ஒரு வரியாக விமானம் பத்திரமாக வந்து இறங்கியது. அந்த அனுபவத்தை என் வாழ்நாளில் நான் மறக்கவே மாட்டேன் என்று அஸ்வின் கூறினார்.

Story first published: Tuesday, June 7, 2022, 18:31 [IST]
Other articles published on Jun 7, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+