Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வாட்ஸ் அப் மூலம் அஸ்வினை ஏமாற்ற நினைத்த மர்ம நபர்.. கொஞ்சம் மிஸ் ஆகி இருந்தா சிக்கி இருப்பேன்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி ஜாம்பவான் அஸ்வின் தம்மை ஒரு மர்ம நபர் வாட்ஸ் ஆப் மூலம் ஏமாற்ற நினைத்ததாக தெரிவித்திருக்கிறார். அண்மையில் ரஜத் பட்டிதார் பழைய செல்போன் நம்பர் ஒன்று சத்தீஸ்காரரில் உள்ள ஒரு இளைஞருக்கு சென்றிருக்கிறது. அந்த நம்பருக்கு விராட் கோலி, டிவில்லியஸ் போன்றோர் போன் செய்து பேசிய சம்பவமும் நடந்தேறியது.

இந்த நிலையில் போலீசார் உதவியுடன் ரஜத் பட்டிதார், தனது பழைய மொபைல் நம்பரை மீட்டிருக்கிறார். இந்த நிலையில் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஐபிஎல் தொடருக்கு பிறகு வாட்ஸ் அப் மூலம் தம்மை ஒரு நபர் ஏமாற்ற நினைத்ததாக கூறினார்.

Ashwin on Devon conway

இது குறித்து பேசிய அவர், ஐபிஎல் தொடர் முடிவடைந்தவுடன் கான்வே பெயரில் ஒரு நபர் எனக்கு மெசேஜ் அனுப்பினார் அதில் சர்வ சாதாரணமாக ஹாய் மச்சான் எப்படி இருக்க என்று கேட்டார். நானும் அது கான்வே தான் என்று நினைத்து நீ எம்எல்சி தொடரில் விளையாடுகிறாயே, அதை நான் பார்த்து வருகிறேன் என்று கூறினேன்.

திடீரென்று அந்த நபர் விராட் கோலியின் நம்பரை நான் மிஸ் செய்து விட்டேன். எனக்கு தருகிறாயா என்று கேட்டார். நான் முதலில் விராட் கோலி நம்பர் இவர் ஏன் என்று கேட்கிறார் என்று நினைத்தேன். ஒருவேளை நாம் இதை கேட்டால் நம்மை தவறாக நினைத்துக் கொள்வார் என்று நினைத்து விராட் கோலியின் நம்பர் என்று ஒரு கார்டை அனுப்பினேன்.

அதை அவர் வாங்கிய பிறகு அத்துடன் அந்த நபர் நிறுத்திக் கொள்ளாமல் தோனி, ரோகித் சர்மா ஆகியோர் நம்பரையும் நான் மிஸ் செய்து விட்டேன். எனக்கு தருகிறாயா என்று கேட்டார் உடனே நான் புரிந்து கொண்டேன். நான் ஏமாற்றப்படுகிறோம் என நினைத்தேன். அந்த நபரிடம் நான் உனக்கு ஒரு பேட் கொடுத்தேனே அது எப்படி இருக்கிறது என்று கேட்டேன்.

அதற்கு அந்த நபரும் அந்த பேட் நன்றாக இருக்கிறது. ஒன்றும் பிரச்சனை இல்லை என்று கூறினார்.
உண்மையில் நான் கான்வேக்கு எந்த ஒரு பேட்டையும் கொடுக்கவில்லை. இதை அடுத்து அந்த நபர் பொய் சொல்கிறார். அது கான்வே கிடையாது என்பதை புரிந்து கொண்டு நான் அவரை பிளாக் செய்து விட்டேன். அந்த மர்ம நபர் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு என்னை ஏமாற்ற பார்த்திருக்கிறார்.

இதன் பிறகு சிஎஸ்கே whatsapp குரூப்புக்கு சென்று கான்வே நம்பரை செக் செய்தேன். அப்போது அது வேறு நம்பராக இருந்தது. நல்ல வேலையாக விராட் கோலி, ஆஸ்திரேலியா தொடரில் இருந்தபோது வைத்திருந்த தற்காலிக நம்பரை வழங்கினேன். நல்ல வேலை நான் தப்பித்தேன். இல்லை என்றால் அனைவரும் நம்பர்களையும் நான் அந்த மர்ம நபருக்கு வழங்கி இருப்பேன் என்று அஸ்வின் கூறினார்.

Story first published: Wednesday, August 13, 2025, 20:14 [IST]
Other articles published on Aug 13, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+