Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஸ்பின்னர் ஆர் அஸ்வினின் 34வது பிறந்தநாள் கொண்டாட்டம்.. குவியும் வாழ்த்துக்கள்

துபாய் : கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வழிநடத்திய ஸ்பின்னர் ஆர் அஸ்வின் தற்போது ஸ்ரேயாஸ் ஐயரின் தலைமையின்கீழ் டெல்லி கேபிடல்ஸ் அணியில் இணைந்துள்ளார்.

இந்த சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் இவரது ஆளுமை சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அவர் தனது 34வது பிறந்தநாளை இன்று கொண்டாடிவருகிறார். இதையடுத்து பல்வேறு தரப்பிலிருந்தும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளது.

34வது பிறந்தநாள்

34வது பிறந்தநாள்

இந்திய மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணயின் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் தன்னுடைய 34வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை கேப்டனாக சில வருடங்கள் வழிநடத்திய அஸ்வின், தற்போது டெல்லி கேபிடல்ஸ் அணியில் ஸ்ரேயாஸ் ஐயரின் தலைமையின்கீழ் இந்த சீசனில் விளையாடவுள்ளார்.

இரண்டாவது வீரர் அஸ்வின்

இரண்டாவது வீரர் அஸ்வின்

கடந்த 2017ல் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கடைசியாக பங்கேற்று விளையாடிய அஸ்வின், டெஸ்ட் போட்டிகளில் முக்கிய வீரராக உள்ளார். கடந்த 2011ல் இவர் தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய நிலையில், இதில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரராக உள்ளார். இதேபோல, ஐபிஎல்லியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்பின்னர்களில் 4வது இடத்தில் அவர் உள்ளார். 139 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 125 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியுள்ளார்.

பல்வேறு தரப்பினரும் வாழ்த்து

பல்வேறு தரப்பினரும் வாழ்த்து

இந்நிலையில் அஸ்வின் தன்னுடைய 34வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். டெல்லி கேபிடல்ஸ் அணி தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளது. பிசிசிஐயும் அவரது சாதனைகளை பட்டியலிட்டு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளது.

அதிக விக்கெட்டுகளை வீழ்த்த வாழ்த்து

அதிக விக்கெட்டுகளை வீழ்த்த வாழ்த்து

இதேபோல சக வீரர் அஜிங்க்யா ரஹானேவும் தனது வாழ்த்துக்களை டிவிட்டர் மூலம் பகிர்ந்துள்ளார். ஐபிஎல் அணி நிர்வாகமும் தனது டிவிட்டர் பக்கத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக அவர் அதிக விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்துள்ளது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ், இஎஸ்பிஎன் கிரிக்இன்போ ஆகியவையும் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளது. ஏராளமான ரசிகர்களும் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.

Story first published: Thursday, September 17, 2020, 13:09 [IST]
Other articles published on Sep 17, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+