Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது காமெடி அல்ல சிரிக்க.. போராடுகிறது இந்தியா - அஷ்வின்

சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்தியா திறம்பட போராடியுள்ளதாக ரவிச்சந்திரன் அஷ்வின் கூறியுள்ளார்.

சென்னை டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 578 ரன்கள் குவித்தது. கேப்டன் ஜோ ரூட் இரட்டை சதம் அடித்தார். ஆனால், இந்திய அணியோ வெறும் 337 ரன்களில் சுருண்டது.

அதேசமயம், இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக பந்து வீசிய இந்திய அணி இங்கிலாந்தை 178 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கியது. அஷ்வின் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

 ஃபிளாட் பிட்ச்

ஃபிளாட் பிட்ச்

இந்நிலையில், போட்டி குறித்து பேசியுள்ள அஷ்வின், "தனிப்பட்ட முறையில் இந்த பிட்சை பார்க்கும் போது, இது பேட்டிங்கிற்கு சப்போர்ட்டாக இருக்கும் என்று நம்பினேன். அதேசமயம், அதையும் தாண்டி இந்த பிட்ச் உதவி புரியலாம் என்று நினைத்தேன். ஏனெனில், இது ஃபிளாட் பிட்சாக உள்ளது.

 மீண்டு வந்துள்ளோம்

மீண்டு வந்துள்ளோம்

டாஸ் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனாலும், 3வது நாள் மற்றும் 4வது நாளில் நாங்கள் மிகக் கடுமையாக போராடி மீண்டு வந்துள்ளோம் என்று நம்புகிறேன். 5வது நாளும் நன்றாக அமைந்துவிட்டால், உண்மையில் இந்த டெஸ்ட் போட்டி குறித்து நாங்கள் மகிழ்ச்சி அடைவோம்.

 அடையாளம் காணவில்லை

அடையாளம் காணவில்லை

வாஷிங்டன் சுந்தரை பொறுத்தவரை அவர் ஒரு அற்புதமான பேட்ஸ்மேன். அவரது பேட்டிங் திறமையை இன்னும் எவரும் சரியாக அடையாளம் காணவில்லை. அவர் ஒரு தனித்துவம் வாய்ந்த பேட்ஸ்மேன்.

 காயத்தால் அவதி

காயத்தால் அவதி

டிரஸ்ஸிங் ரூமில், நான் பார்த்த அளவில் இஷாந்த் ஒரு கடுமையான உழைப்பாளி. சில வருடங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவுக்கு சென்ற போது, அங்கு ரிக்கி பாண்டிங்கை அவர் பாடுபடுத்தியதால், அடுத்தடுத்து நிறைய தொடர்களில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அவர் தொடர்ந்து காயங்களால் அவதிப்பட்டார்.

 ரோல் மாடல் இஷாந்த்

ரோல் மாடல் இஷாந்த்

ஒரு வேகப்பந்து வீச்சாளராக 100வது டெஸ்ட் போட்டியை நெருங்குவது எல்லாம் சும்மா ஜோக் கிடையாது. அதுவும் 300 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருக்கிறார். ஆனால், அவர் தொடர்ந்து சிறப்பாக விளையாடி 400 விக்கெட்.. ஏன் முடிந்தால் 500 விக்கெட்டுகள் கூட வீழ்த்தி, அடுத்து வரும் தலைமுறைக்கு சான்றாக இருக்க வேண்டும்" என்றார்.

Story first published: Tuesday, February 9, 2021, 11:12 [IST]
Other articles published on Feb 9, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+