Ashwin - ஐபிஎல் முதல் சீசன் முதல் தற்போது வரை அஸ்வின் வாங்கிய சம்பளம் ஆண்டு வாரியாக விவரம்
சென்னை : இந்திய கிரிக்கெட்டில் சாதாரண ஒரு இளைஞனாக வந்து பின்னர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையுடன் ஓய்வு பெற்றிருக்கிறார். அஸ்வின் ஐபிஎல் தொடர் மூலம் பல கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை மாறி இருக்கிறது.
அதில் முதன்மையான நபர் என்றால் அது நம் அஸ்வின் தான். அஸ்வின் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் நன்கு பெயரை பெற்று வந்தாலும், ஐபிஎல் தொடர் மூலம்தான் கிரிக்கெட் அனுபவம் பெற்று பெரிய அளவில் சாதிக்க உதவியது.

மேலும் இந்திய கிரிக்கெட் அணிக்கு விளையாட ஐ பி எல் பாதை வகுத்துக் கொடுத்திருக்கிறது. இந்த சூழலில் ஐபிஎல் தொடரில் அஸ்வின் ஒவ்வொரு சீசனிலும் எவ்வளவு சம்பளம் வாங்கி இருக்கிறார் என்பதை தற்போது பார்க்கலாம். அஸ்வின் 2008 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக முதல் முறையாக தேர்வானார். முதல் சீசனில் அஸ்வின் 12 லட்சம் ரூபாய் தான் சம்பளம் வாங்கினார்.
அது மட்டும் இல்லாமல் 2009, 2010 என தொடர்ந்து மூன்று சீசனிலும் அவருடைய சம்பளம் 12 லட்சம் ரூபாய் தான். இந்த மூன்று வருடத்தில் மிகப்பெரிய பெயரை பெற்ற நிலையில் 2011 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணி அஸ்வினை மூன்று கோடியே 91 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கி விட்டது. 2011, 2012, 2013 என மூன்று சீசன் அவருக்கு 3 கோடியே 96 ரூபாயை சிஎஸ்கே வழங்கியது.
இதனை அடுத்து, 2014 ஆம் ஆண்டு சீசனில் அஸ்வின் 7 கோடியே ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்து சிஎஸ்கே அணி மீண்டும் வாங்கியது. 2015 சீசனில் ஏழரை கோடி சம்பளத்தை வாங்கினார். 2016 ஆம் ஆண்டு பூனே அணி அஸ்வினை அதே ஏழரை கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. 2017 சீசனையும் அஸ்வின் ஏழரை கோடி சம்பளத்தை தான் வாங்கினார்.
இதனை அடுத்து 2018 ஆம் ஆண்டு சீசனில் பஞ்சாப் அணி அஸ்வினை ஏழு கோடியே 60 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியது. 2019 ஆம் ஆண்டு சீசனும் அஸ்வின் அதே தான் சம்பளம் வாங்கினார். இதனை அடுத்து டெல்லி அணி அஸ்வினுக்கு 7 கோடி 60 லட்சம் கொடுத்து வாங்கியது.2020 மற்றும் 21 ஆகிய சீசனில் 7.6 கோடி ரூபாய் சம்பளத்தில் விளையாடினார். 2022 ஆம் ஆண்டு சீசன் ராஜஸ்தான அணி அஸ்வினை ஐந்து கோடி ரூபாய்க்கு வாங்கியது.
20223 மற்றும் 24 என மூன்று சீசனிலும் அஸ்வின் 5 கோடி ரூபாய் சம்பளத்தில் தான் விளையாடினார். 2025 ஆம் ஆண்டு சீசனில் சிஎஸ்கே அணி அஸ்வினுக்கு 9 கோடியே 75 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறது. ஐபிஎல் தொடரில் அஸ்வின் வாங்கி இருக்கும் அதிகபட்ச சம்பளம் இதுவாகும். அஸ்வின் ஐபிஎல் தொடர் மூலம் மட்டும் 90 கோடி ரூபாய் சம்பளம் ஏறக்குறைய சம்பாதித்து இருப்பார்.


Click it and Unblock the Notifications