தோனி கேப்டனே கிடையாது.. ஒரு டைரக்டர் ! விமர்சனம் செய்த முன்னாள் வீரருக்கு அஸ்வின் தக்க பதிலடி
சென்னை : ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அஸ்வின் இடம்பெற்றவர்களில் இருந்து அவர் மீது பல்வேறு விதமான வன்மங்களை பலரும் உமிழ்ந்து வருகிறார்கள்.
குறிப்பாக முன்னாள் தமிழக கிரிக்கெட் வீரர் லக்சமன் சிவராமகிருஷ்ணன், ட்விட்டர் பக்கத்தில் இருந்து அஸ்வின் குறித்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக தோனியின் தயவால் தான் அஸ்வின் கிரிக்கெட்டில் பெரிய ஆளாக வந்ததாக அவர் ட்விட்டர் பக்கத்தில் இருந்து கருத்து ஒன்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் தனது youtube பக்கத்தில் ஹர்ஷா போக்லே உடன் நடந்த ஒரு உரையாடலை வெளியிட்டு இருக்கிறார். அதில் பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் குறித்து அஸ்வின் பேசினார். அப்போது தோனி தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அஸ்வின் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போல் தோனியையும் பாராட்டினார், தம்மை விமர்சித்த முன்னாள் கிரிக்கெட் வீரருக்கும் பதில் அளித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் தோனி ஒரு கேப்டனே கிடையாது. அவர் ஒரு சினிமா இயக்குனர் போன்றவர். இன்னும் சொல்லப்போனால் அவர் மிகச்சிறந்த திரைப்பட இயக்குனர் போல் கிரிக்கெட் போட்டிகளில் செயல்படக்கூடியவர். ஒரு திரைப்பட இயக்குனர் என்ன செய்வார். எந்த கதாபாத்திரத்திற்கு யார் சரியாக இருப்பார் என்பதை கணித்து அதற்கு தகுந்தார் போல் ஒரு நபரை படத்தில் நடிக்க வைப்பார்.
தோனி கிரிக்கெட் களத்திலும் இதைத்தான் செய்வார். எந்த இடத்திற்கு யார் தேவைப்படுவார் என்பதை அவர் கணித்து அந்த நபருக்கு குறிப்பிட்ட ஒரு கதாபாத்திரத்தை கொடுத்து விடுவார். இதனை அந்த வீரர்கள் சரியாக செய்தால் அணி நிச்சயமாக வெற்றி பெற்றுவிடும்.2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சுரேஷ் ரெய்னாவுக்கு தோனி இப்படி ஒரு பணியை தான் கொடுத்ததாக அஸ்வின் கூறியுள்ளார்.தம்மிடம் உள்ள திறமையை பார்த்து தான் தோனி தமக்கு பொறுப்பை வழங்கியதாக மறைமுகமாக அஸ்வின் விளக்கம் அளித்து இருக்கிறார்.


Click it and Unblock the Notifications