Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புறக்கணிக்கும் கோஹ்லி.. வாய்ப்புகள் என் வீட்டுக் கதவைத் தட்டும்.. அஸ்வின் அசால்ட் பேட்டி!

சென்னை: இதுவரை தான் ஆடிய அனைத்து ஆட்டங்களிலும் சிறப்பாகவே ஆடியுள்ளேன். என்னுடைய முழுத் திறமையை அனைவரிடமும் வெளிப்படுத்திக் காட்டியுள்ளேன்.

என்னுடைய திறமையின் காரணமாக கண்டிப்பா விரைவில் அணியில் எனக்கு வாய்ப்பு அளிக்கப்படும். அந்த வாய்ப்பும் என் வீடு தேடி வரும் என விளையாட்டு வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

தற்போதைய இந்திய அணியில் விளையாடாதது குறித்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் பேசியபோது அஸ்வின் இவ்வாறு தெரிவித்தார்.

 நம்பர் ஒன் அஸ்வின்

நம்பர் ஒன் அஸ்வின்

ஒருகாலத்தில் டோணியின் வலது கையாக செயல்பட்டு வந்தார் தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின். அணியில் மிகவும் சிறப்பாக செயற்பட்ட அஸ்வின் நீண்ட காலத்திற்கு நம்பர் ஒன சுழற் பந்து வீச்சாளராக திகழ்ந்தார். ஐசிசியின் தரவரிசையில் முதல் இடம், டி-டுவண்டியில் சிறப்பான ஆட்டம் என முழு பார்மில் "கெட்ட ஆட்டம்" போட்டுக் கொண்டிருந்தார் அஷ்வின். அணியின் நிரந்தர சுழற்பந்து வீச்சாளர் இவர்தான் என அனைவரும் பாராட்டும் வகையில் செயல்பட்டார்.

 அஷ்வின் அவுட்

அஷ்வின் அவுட்

இந்த நிலையில் அணியின் கேப்டனாக கோஹ்லி பொறுப்பேற்றதை அடுத்து, இந்திய அணியில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டன. அணியின் முக்கிய பவுலரான அஸ்வின் வெளியேற்றப்பட்டார். அஸ்வினுக்கு பதிலாக சாஹல், குல்தீப் என்ற இரு புதிய சுழற்பந்து வீச்சாளர்களைக் களம் இறக்கினார் கோஹ்லி. இந்த இருவருமே இப்போது அணியில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

 வாய்ப்புகள் வீட்டுக் கதவை தட்டும்

வாய்ப்புகள் வீட்டுக் கதவை தட்டும்

இந்த நிலையில் அணியில் இருந்து தான் வெளியேற்றப்பட்டது குறித்தும், இது வரை அவர் தேர்வு செய்யப்படாமல் இருப்பது குறித்தும் பத்திரிக்கையாளர்களுக்கு அஸ்வின் பேட்டி அளித்தார். இதில் அவர் "நான் இதுவரை ஆடிய ஆட்டங்கள் அனைத்தையும் மிகவும் சிறப்பாகவே ஆடியுள்ளேன். என்னுடைய முக்கியத்துவம் அனைவருக்கும் தெரியும். இன்னும் மிகச் சில காலத்தில அணியில் நான் தேர்ந்தெடுக்கப்படுவேன். வாய்ப்புகள் என் வீட்டுக் கதவைத் தட்டும்'' என்று கூறியுள்ளார்.

 கோலி குறித்து கருத்து

கோலி குறித்து கருத்து

அணியின் தற்போதைய கேப்டன் கோலி குறித்து அஸ்வின் பேசிய போது "விராட் கோஹ்லி மிகவும் திறமையாக அணியை வழி நடத்துகிறார். அவரின் தலைமைக்கு கீழ் நான் விளையாடுவேனா என்பது குறித்து இப்போது தெரிவிக்க முடியாது. எனக்கு கிரிக்கெட் மட்டுமே முக்கியம், எந்த இடத்தில் விளையாடினாலும் , அது உள்ளூர் போட்டியாக இருந்தாலும் சந்தோசமாக விளையாடுவேன். விரைவில் விராட்டின் அணியிலும் விளையாடுவேன்'' என்கிறார்.

Story first published: Monday, October 9, 2017, 11:44 [IST]
Other articles published on Oct 9, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+