Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

8 மாதங்களுக்கு பிறகு அஸ்வினுக்கு வாய்ப்பு.. ரோகித் எடுத்த அதிரடி முடிவு.. ரசிகர்கள் ஆச்சர்யம்

மும்பை : மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடுகிறது.

Recommended Video

West Indies T20 தொடருக்கான India அணி அறிவிப்பு IND vs WI *Cricket

இதற்கான ரோகித் சர்மா தலைமையில் 18 பேர் கொண்ட வீரர்களை பிசிசிஐ அறிவித்துள்ளது.

இதில் தமிழக வீரர் அஸ்வினை எட்டு மாதங்களுக்குப் பிறகு இந்திய டி20 அணியில் பிசிசிஐ தேர்வு செய்துள்ளது.

அஸ்வினின் லக்

அஸ்வினின் லக்

சாஹலுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் அஸ்வினுக்கு பிசிசிஐ வாய்ப்பு வழங்கியுள்ளது. 2020 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடிய போது பிளேயிங் லெவலில் அஸ்வினுக்கு விராட் கோலி வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால் அதன் பிறகு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன் பிறகு நடைபெற்ற நியூசிலாந்து தொடரிலும் அஸ்வின் பங்கேற்றார் .

தீவிர பயிற்சி

தீவிர பயிற்சி

இந்த நிலையில் தான் சம்பந்தமே இல்லாமல் அஸ்வின் இந்திய ஒரு நாள் மற்றும் டி20 அணியில் இருந்து நீக்கப்பட்டார். அப்போது அஸ்வினுக்கு பதிலாக சாஹல் மற்றும் குல்லிப் யாதவை தேர்வு குழுவினர் டி20 அணிக்காக வாய்ப்பு வழங்கினர் . இதனால் அஸ்வின் இந்திய அணிக்கு திரும்புவது கேள்விக்குறியாக இருந்தது. இதனை அடுத்து அஸ்வின் தீவிர பயிற்சி மேற்கொண்டு உடல் எடையை குறைத்தார்.

சுழற்பந்துவீச்சு பட்டாளம்

சுழற்பந்துவீச்சு பட்டாளம்

அதன் பிறகு ஐபிஎல் தொடரில் சாஹலுக்கு பக்க பலமாக அஸ்வின் இருந்தாலும், அவருடைய பழைய பந்துவீச்சு தென்படவில்லை .ஆனால் அதே சமயம் அஸ்வின் தனது பேட்டி கூடுதல் கவனம் செலுத்தி ஆல்ரவுண்டராக இருந்தார். தற்போது இந்திய அணியில் சாஹல் குல்திப், ரவி பிஸ்னாய் ,ஜடேஜா, அக்சர் பட்டேல் போன்ற சுழற் பந்துவீச்சு பட்டாளமே உள்ளனர்.

காரணம் என்ன?

காரணம் என்ன?

இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் அஸ்வினை தேர்வு குழுவினர் தேர்வு செய்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். அஸ்வினுடைய அனுபவமும் திறமையும் இந்திய அணிக்கு தேவைப்படும் என ரோகித் சர்மா விரும்புவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Story first published: Thursday, July 14, 2022, 16:16 [IST]
Other articles published on Jul 14, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+