Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாரிஸ்டோ ரன் அவுட் விவகாரம்.. அஸ்வின் சொன்ன விசயம்.. கடுப்பான ரசிகர்கள்.. இது வேண்டாத வேலை சார்

லண்டன் : ஆசஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடி ஆஸ்திரேலியாவுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வந்தது.

இந்த நிலையில் இங்கிலாந்து வீரர் பாரிஸ்டோ ஓவர் முடிந்து விட்டது என எண்ணி கிரீசை விட்டு வெளியே வந்தார். அப்போது பந்தை வைத்திருந்த விக்கெட் கீப்பர் ஸ்டம்பில் பந்தை அடித்து ரன் அவுட் செய்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

R Ashwin speaks about his mind on johnny bairstow runout in the ashes

பலரும் இதை கிரிக்கெட் நன்னடத்தை விதிகளுக்கு எதிரானது என்றும் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கௌதம் கம்பீர் ஸ்பிரிட் ஆப் தி கேம் என்று சொல்வதெல்லாம் இந்திய அணிக்கு மட்டும்தான் உங்களுக்கெல்லாம் கிடையாதா என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த நிலையில் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் வெளியிட்டுள்ள பதிவில், இதில் ஒரு விஷயத்தை நாம் அனைவரும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு விக்கெட் கீப்பர் ஸ்டெம்பில் இருந்து அதிக தூரம் நின்று கொண்டு பந்தை எரிந்து சும்மா ஆட்டம் இழக்க செய்திருக்க மாட்டார். ஒரு பேட்ஸ்மேன் தொடர்ந்து பந்து முடிவதற்குள் கிரீசை விட்டு வெளியே செல்வதை கவனித்து இருந்தால் மட்டுமே இப்படி பாரிஸ்டோ கிரிசை விட்டு வெளியேறிய உடன் அவரை ஆட்டம் இழக்க வைத்திருக்கக்கூடும். இந்த தருணத்தில் அலெக்ஸ் கேரியின் புத்திக் கூர்மையை நாம் பாராட்ட வேண்டுமே தவிர இது நன்னடத்தை விதிகளுக்கு எதிரானது.

இது நல்ல கிரிக்கெட் கிடையாது என்றெல்லாம் திட்டக்கூடாது என அஸ்வின் கூறியுள்ளார். அஸ்வினின் இந்த கருத்துக்கு இந்திய ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கிரிக்கெட் விதிகளுக்கு எதிராகவும் நன்னிடத்தைக்கு எதிராகவும் செயல்படுவதை புத்திசாலித்தனம் என்று சொல்லக்கூடாது என்று ரசிகர்கள் அறிவுரை வழங்கி இருக்கிபெற்றது.

Story first published: Sunday, July 2, 2023, 23:07 [IST]
Other articles published on Jul 2, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+