Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கபில்தேவ் சாதனையை முறியடித்த அஸ்வின்.. அதிவேகமாக 3வது இந்திய வீரர் என பெருமை.. ஜடேஜாவும் அசத்தல்

இந்தூர் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் அஸ்வின் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

இந்தூர் டெஸ்டில் முதல் நாளில் அஸ்வின் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்தாத நிலையில் இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியவுடன் தனது மேஜிக்கை அஸ்வின் காட்டினார்.

20.3 ஓவர்களை வீசிய அஸ்வின் 44 ரன்கள் விட்டுக் கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். நேற்று தான் ஐசிசி தரவரிசை பட்டியலில் அஸ்வின் முதல் இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிக விக்கெட்டுகள்

அதிக விக்கெட்டுகள்

இன்று 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் அஸ்வின் ஒரு மகத்தான சாதனையை படைத்திருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியலில் ஜாம்பவான் கபில்தேவை முந்தி அஸ்வின் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். 36 வயதான அஸ்வின் 269 போட்டிகளில் விளையாடி 689 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

அதிவேகமாக அசத்தல்

அதிவேகமாக அசத்தல்

கபில்தேவ் 356 போட்டிகளில் விளையாடி 687 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இதன் மூலம் அதிவேகமாக விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனையையும் அஸ்வின் படைத்திருக்கிறார். இந்த பட்டியலில் அணில் கும்ப்ளே 400 போட்டிகளில் விளையாடி 953 விக்கெட்டுகளையும் ஹர்பஜன் சிங் 365 போட்டிகளில் விளையாட 707 விக்கெட்டுகளையும் கைப்பற்றி உள்ளனர்.

டாப் 5

டாப் 5

3வது இடத்தில் அஸ்வின் 269 போட்டிகளில் விளையாடி 689 விக்கெட்களையும் கபில்தேவ் 356 போட்டிகளில் விளையாடி 687 விக்கெட்டுகளையும் ஜாகிர் கான் 303 போட்டிகளில் விளையாடி 597 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கிறார்கள். நடப்பு தொடரில் மட்டும் அஸ்வின் இதுவரை 16 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதேபோன்று ஆல்ரவுண்டர் ஜடேஜாவும் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

ஜடேஜா ரெக்கார்ட்

ஜடேஜா ரெக்கார்ட்

சர்வதேச கிரிக்கெட்டில் ஐந்தாயிரம் ரன்கள் மற்றும் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை அவர் நிகழ்த்தி இருக்கிறார். இதற்கு முன்பாக இந்தியா சார்பில் கபில்தேவ் மட்டுமே இந்த ரெக்கார்டை படைத்திருந்தார். தற்போது ஆஸ்திரேலிய அணி வெறும் 76 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கடைசி இன்னிங்ஸ் நாளை களமிறங்குகிறது. இதில் அஸ்வினும் ஜடேஜாவும் ஏதேனும் அதிசயத்தை நிகழ்த்தினால் மட்டுமே இந்திய அணி வெற்றி பெற முடியும்.

Story first published: Thursday, March 2, 2023, 19:23 [IST]
Other articles published on Mar 2, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+