For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலககோப்பையின் போது இது நடக்கவே கூடாது.. இல்லையெனில் இந்தியாவுக்கு ஆபத்து.. அஸ்வின் கருத்து

மும்பை : உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டது குறித்து தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் தனது கருத்துக்களை கூறியிருக்கிறார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் அஸ்வின் சேர்க்கப்படாத நிலையில் தற்போது அவர் டிஎன்பிஎல் தொடரில் விளையாடுகிறார்.

வழக்கம் போல் தனது ஓய்வு நேரத்தில் கிரிக்கெட் தொடர்பான தனது கருத்துக்களை அஸ்வின் வெளியிட்டு வருகிறார். இதில் உலக கோப்பை தொடர்பான அட்டவணை வெளியிடப்பட்டது குறித்து அஸ்வின் பேசியிருக்கிறார். இதில் பேசிய அவர் ஐசிசி கோப்பையை இம்முறையாவது இந்தியா வெல்லுமா என்று பலரும் கேட்டு வருகிறார்கள். இதற்கு எனது பதில் இதுதான் இந்தியா நிச்சயம் உலக கோப்பையை வெல்லக்கூடிய வாய்ப்பு இருக்கும் அணியாக தான் பார்க்கப்படும்.

R Ashwin warns dew might play a key role in icc world cup

நாங்கள் விளையாடும் போதே இதே கேள்வியை தான் தொடர்ந்து கேட்டு வருகிறோம். இது போன்ற கேள்வி நிச்சயம் விசித்திரமானது இந்தியா ஒரு பலமான அணியாக விளங்குகிறது. சில காரணிகள் சரியாக அமைந்தால் இம்முறை உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பு இந்தியாவுக்கு அதிகமாக இருக்கிறது. மேலும் உலகக் கோப்பையில் டாஸ் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று நம்புகிறேன்.

இந்திய அணியின் பேட்டிங் திறமை பந்துவீச்சு சுழற்பந்து வீச்சு என அனைத்துமே பனிப்பொழிவு இல்லை என்றால் மிகப்பெரிய சக்தியாக இணைந்து தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் பனிப்பொழிவு இருக்கும் பட்சத்தில் இந்தியா மட்டுமல்ல அனைத்து அணிகளுக்குமே அது ஆபத்தாக விளங்கும். டாசில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள்தான் வெற்றி பெறுவார்கள் என்ற நிலை மாறிவிடும் என்று அஸ்வின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் மாதத்தில் நடைபெறுகிறது. இந்த காலகட்டத்தில் தென் இந்தியாவில் மழையும் வட இந்தியாவில் பனிப்பொழிவும் அதிகம் இருக்கும். இதனால் பனிப்பொழிவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதை தான் அஸ்வின் முன்கூட்டியே கூறியிருக்கிறார். இதனை தடுக்க ஐசிசியும் பிசிசிஐயும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் கோரிக்கை ஆகும்.

Story first published: Friday, June 30, 2023, 15:07 [IST]
Other articles published on Jun 30, 2023
English summary
R Ashwin warns dew might play a key role in icc world cup உலககோப்பையின் போது இது நடக்கவே கூடாது.. இல்லையேனில் இந்தியாவுக்கு ஆபத்து.. அஸ்வின் கருத்து
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+