
விராட் கோலிக்கு ஓய்வு
இதில் முன்னணி வீரரான விராட் கோலிக்கு ஓய்வு கொடுத்தது தான் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. கடந்த 2 வருடங்களாக விராட் கோலியின் ஃபார்ம் மோசமாக இருந்து வருவதால், அவருக்கு அவ்வப்போது ஓய்வு தரப்பட்டு வருகிறது. எனினும் இங்கிலாந்துடனான 2வது ஒருநாள் போட்டியில் அவர் 16 ரன்களுக்கு அவுட்டாகி ஏமாற்றினார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மீண்டும் ஓய்வு என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்.பி.சிங் காட்டம்
இந்நிலையில் பிசிசிஐ-ன் இந்த நடவடிக்கைக்கு முன்னாள் வீரர் ஆர்.பி.சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஒரு வீரர் நன்றாக ஆடாத போது ஓய்வு கேட்கவே மாட்டார். அவர் அதிக போட்டிகளில் விளையாடி ஃபார்முக்கு திரும்ப தான் நினைப்பார். ஆனால் இந்த நடைமுறை தற்போது குறைந்துவிட்டது. ஓய்வில் எப்படி ஒரு வீரர் ஃபார்முக்கு திரும்ப முடியும்.

பலருக்கும் கிடையாது
ஓய்வு என்ற பெயரில் பிசிசிஐ கொடுக்கும் சொகுசு, அனைத்து வீரர்களுக்கும் கிடைப்பதில்லை. நானும் பிராக்யன் ஓஜாவும் இந்திய அணிக்காக விளையாடிய போது, ஓய்வு என்ற பேச்சுக்கு இடமே இல்லை. அணியில் தேர்வானோமோ இல்லையோ... யாரும் எங்களிடம் ஓய்வு வேண்டுமா? என்று கேட்டதில்லை.

உண்மையிலேயே காயமா?
2007 டி20 உலகக்கோப்பைக்கு முன்பு சீனியர் வீரர்கள் கூட ஓய்வு என்பதை எடுக்கவே இல்லை. ஏனென்றால் அப்போது டி20 கிரிக்கெட் புதிதாக வந்தது.
கிரிக்கெட் வீரர் விளையாடும் நாட்கள் என்பது குறைவுதான். என்றாவது ஒருநாள் ஓய்வு பெற்று தான் ஆக வேண்டும். விராட் கோலிக்கு உண்மையில் காயம் ஏற்பட்டிருந்தால், ஓய்வு எடுப்பது தவறில்லை. ஆனால் ஃபார்முக்கு திரும்ப ஓய்வு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஆர்.பி.சிங் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications