Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனிக்கு குழி பறித்தாரா கோலி ? முன்னாள் பயிற்சியாளர் ஸ்ரீதர் அதிர்ச்சி கருத்து.. தடுத்ததே ரவி தானாம்

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் lடாப் நட்சத்திரஙகளான விராட் கோலி தோனி ஆகியோர் உற்ற நண்பர்கள் என்று அனைவருக்குமே தெரியும். ஆனால், விளையாடிய காலத்தில் தோனி, கோலிக்கு இடையே கேப்டன் பதவி குறித்து சிக்கல் எழுந்திருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

2014 ஆம் ஆண்டு டெஸ்ட் கேப்டன் பதவிக்கு வந்த விராட் கோலி, மூன்று பிரிவுக்கும் கேப்டன் ஆக விரும்பியதாக முன்னாள் ஃபில்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் பயிற்சியாளராக இருந்த காலக் கட்டத்தில் நடந்த அம்சங்களை ஸ்ரீதர் புத்தகமாக வெளியிட்டுள்ளார்.

அதில் தான் விராட் கோலி மீதான விமர்சனத்தை அவர் வைத்திருக்கிறார். ரவி சாஸ்த்ரியை பாராட்டுகிறேன் என்ற பெயரில் கோலியை போட்டு கொடுத்தார் என்ற செய்தி தான் உண்மையில் நிஜம்.

ரவி சாஸ்த்ரி அட்வைஸ்

ரவி சாஸ்த்ரி அட்வைஸ்

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள புத்தகத்தில், கோலி கேப்டன் பதவி மீது குறி வைத்து செயல்பட்டதை அறிந்த ரவி சாஸ்த்ரி ஒருநாள் இரவு அவரை தமது அறைக்கு அழைத்ததாக குறிப்பிட்டுள்ளார். அப்போது, டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியே விலகி, உனக்கு பதவி வழங்கி இருக்கிறார். ,தனால் தோனியை நீ மதித்து நடக்க வேண்டும். தோனி எப்போது ராஜினாமா செய்கிறாரோ, அது வரை நீ பொறுமை காக்க வேண்டும்.

தேடி வரும்

தேடி வரும்

தோனியே இந்த பதவியை உனக்கு வழங்கவார். அதுவரை நீ தோனிக்கு மரியாதை தர வேண்டும். அப்போது தான் நாளை நீ கேப்டனாக வரும் போது, மற்ற வீரர்கள் உன்னை மதிப்பார்கள் என்று விராட் கோலிக்கு ரவி சாஸ்திரி அறிவுரை வழங்கி இருக்கிறார். மேலும் கேப்டன் பதவிக்கு பின்னால் செல்லாமல், தொடர்ந்து அணிக்காக விளையாடினால், கேப்டன் பதவி உன்னை தேடி வரும் என்றும் ரவி சாஸ்த்ரி கூறியுள்ளார்.

பாராட்டு

பாராட்டு

ரவி சாஸ்த்ரியின் இந்த அறிவுரையை விராட் கோலி பின்பற்றியதால், தோனியுடன் நல்ல உறவை பேண முடிந்ததாக ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். கோலி விவகாரத்தை பயிற்சியாளர் ரவி சாஸ்த்ரி சிறப்பாக கையாண்டதாகவும் ஸ்ரீதர் பாராட்டியுள்ளார். ஸ்ரீதரின் இந்த புத்தகம் மூலம், கேப்டன் பதவி தமக்கு வேண்டும் என்று விராட் கோலி போர்க் கொடி தூக்கியது தற்போது தெளிவாக உள்ளது.

மீண்டும் அதே நிலை

மீண்டும் அதே நிலை

தற்போது மீண்டும் இதே போன்ற ஒரு சூழல் உருவாகியுள்ளது. இந்திய டி20 அணியின் கேப்டனாக ஹ்ர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இதனை கொஞ்சமும் ரோகித் சர்மா விரும்ப வில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இருவரையும் ராகுல் டிராவிட் அழைத்து பேசி இந்த சூழலை சுமூகமாக கையாள வேண்டும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Story first published: Friday, January 13, 2023, 10:52 [IST]
Other articles published on Jan 13, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+