“கோலி செய்த தவறை ரோகித் செய்யல” உலகக்கோப்பையில் இந்தியா சொதப்பியது எப்படி??.. ஆர்.ஸ்ரீதர் கருத்து!
மும்பை: 2019ம் ஆண்டு உலகக்கோப்பையில் தோல்வியடைய விராட் கோலி - ரவி சாஸ்திரி செய்த ஒரு மோசமான தவறு தான் காரணம். ஆனால் தற்போது ரோகித்தும், டிராவிட்டும் அதை மட்டும் செய்யாமல் கவனமாக உள்ளதாக பயிற்சியாளர் ஆர்.ஸ்ரீதர் கூறியுள்ளார்.
2023ம் ஆண்டுக்கான 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ளது. இந்த முறை சொந்த மண்ணில் போட்டி நடைபெறுவதால் எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என இந்திய வீரர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர்.
2013ம் ஆண்டுக்கு பின்னர் ஐசிசி கோப்பையை வெல்ல வேண்டும் என்ற இந்தியாவின் கனவு இன்னும் நிறைவேறாமலேயே உள்ளது. தோனிக்கு பின்னர் கேப்டன்சி பொறுப்பேற்ற விராட் கோலியால் இந்திய அணியை கோப்பைக்கு அருகில் வரை கொண்டு செல்ல முடிந்தாலும் சாம்பியன் பட்டம் பெற்று தர முடியவில்லை.

எகிறிய எதிர்பார்ப்பு
கடந்த 2019ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் லீக் போட்டிகள் அனைத்திலும் தொடர்ச்சியாக வெற்றி கண்டு இந்தியா மிக பலமாக வலம் வந்தது. எனினும் அரையிறுதியில் நியூசிலாந்து காட்டிய சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி சரணடைந்தது. எனவே இந்த முறை ரோகித் சர்மாவாவது கோப்பை வென்று கொடுப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

ஆர்.ஸ்ரீதர் சுவாரஸ்ய தகவல்
இந்நிலையில் இதுகுறித்து ஆர்.ஸ்ரீதர் சுவாரஸ்ய தகவலை கொடுத்துள்ளார். 2019 உலகக்கோப்பையில் கோலி - ரவி சாஸ்திரி செய்த மிகப்பெரிய தவறு நம்பர் 4வது இடத்தை உறுதி செய்யாமல் இருந்தது தான். 2015ம் ஆண்டு இருந்து தேடியும், 4வது இடத்திற்கு சரியான ஒரு வீரரை நம்பி, தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுக்கவில்லை. உடனடியாக ரிசல்ட் வேண்டும் என்பதற்காக அடிக்கடி வீரர்களை மாற்றிக்கொண்டே இருந்தோம். அதுதான் பிரச்சினையாக வெடித்தது.

ரோகித் - டிராவிட் கூட்டணி
அம்பத்தி ராயுடு தான் இந்திய அணியின் 4வது இடத்தில் பெரும்பாலான போட்டிகளில் விளையாடியிருந்தார். ஆனால் அதிர்ச்சி தரும் வகையில் உலகக்கோப்பைக்கான அணியில் அவரின் பெயர் இடம்பெறவில்லை. எனவே ஒரு வீரருக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு தர வேண்டும், ஃபார்ம் அவுட்டானாலும் அவருக்கு ஆதரவு தர வேண்டும் என்ற பழக்கம் தற்போது ரோகித் - டிராவிட் ஆகியோரிடையே உள்ளது. இதனால் கோப்பையை வென்றுவிடலாம் என ஆர்.ஸ்ரீதர் கூறியுள்ளார்.

உதாரணங்கள்
ஆர்.ஸ்ரீதர் கூறியதை போல இந்திய அணியில் வீரர்களின் பாதுகாப்பு சிறப்பாக இருந்தது என்றே கூறலாம். ஏனென்றால் விராட் கோலி கடந்த 3 வருடங்களாகவே மிக மோசமான ஃபார்மில் இருந்து வந்தார். ஆனால் அவரை தொடர்ந்து ஆதரித்ததால் இன்று பலமான நிலையில் அணி உள்ளது. கே.எல்.ராகுலுக்கும் தற்போது இதையே தான் செய்துள்ளனர் ரோகித் - டிராவிட் கூட்டணி


Click it and Unblock the Notifications