Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நீங்களே பார்த்துக்குங்க.. ரோஹித்திடம் சொன்ன ரஹானே.. இப்படி பாதியில் மாற்றியது ஏன்? என்ன நடந்தது?

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் துணை கேப்டன் ரோஹித் சர்மாவிடம் கேப்டன் ரஹானே அடிக்கடி ஆலோசனை கேட்டது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் இந்தியா ஆடி வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா தற்போது பேட்டிங் செய்து வருகிறது. மூன்றாவது டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் முடிந்துள்ளது.

முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 2 விக்கெட்டிற்கு 166 ரன்கள் எடுத்துள்ளது. மார்னஸ், புக்கோவஸ்கி இருவரும் இதில் அரைசதம் அடித்துள்ளனர்.

என்ன நடந்தது

என்ன நடந்தது

இந்த போட்டியில் 15 ஓவர்களுக்கு பின் அஸ்வின், சைனி இருவரும் அதிக ரன்கள் கொடுக்க தொடங்கினார்கள். இதனால் ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் உயர தொடங்கியது. இந்திய அணியின் 5 பவுலர்களில் ஜடேஜா தவிர எல்லோரும் ஓவர் வீசி இருந்த நிலையில், விக்கெட் எடுக்க முடியாமல் வீரர்கள் திணறினார்கள்.

சூப்பர்

சூப்பர்

ரஹானேவும் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பினார். அஸ்வினும் விக்கெட் எடுக்க முடியவில்லை , பும்ராவும் விக்கெட் எடுக்க முடியவில்லை, சைனி ரன் கொடுக்கிறார் என்று ரஹானே கொஞ்சம் திணறினார். இதனால் ரஹானே நேரடியாக சென்று ரோஹித் சர்மாவிடம் ஆலோசனை கேட்டு இருக்கிறார்.

துணை கேப்டன்

துணை கேப்டன்

அதோடு அஸ்வின், சைனி பவுலிங் செய்யும் போது பீல்டிங் நிற்க வைக்கும்படி ரோஹித் சர்மாவிடம் ரஹானே கூறியுள்ளார். பீல்டிங் செட்டிங்கை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். இதையடுத்து துணையை கேப்டன் ரோஹித் சர்மாதான் இவர்கள் இருவருக்கும் பீல்டிங் செட் செய்தார்.

பீல்டிங்

பீல்டிங்

ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்த தொடங்கிய காரணத்தால் ரோஹித் சர்மாவிடம் ரஹானே ஆலோசனை கேட்க தொடங்கினார். அதோடு அஸ்வினும் ஆலோசனைகளை வழங்க தொடங்கினார். கூட்டாக இவர்கள் திட்டம் வகுக்க தொடங்கினார்கள். இதன்பின் கொஞ்சம் ரன் செல்வது கட்டுப்படுத்தப்பட்டது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் இன்று ஓவர் ரொட்டேஷன் பெரிய அளவில் சிறப்பாக இல்லை. இதன் காரணமாக விக்கெட்டும் விழவில்லை. அடிக்கடி பீல்டர்கள் நிற்கும் இடத்தை ஓவருக்கு இடையில் மாற்றியதால் பவுண்டரியும் அதிக அளவில் சென்றது.

சொதப்பல்

சொதப்பல்

இந்திய அணியின் பீல்டிங் மற்றும் பீல்டிங் செட்டப் இரண்டும் கேள்விக்குள்ளாகும் வகையிலேயே இன்று இருந்தது. கடந்த போட்டியில் சிறப்பாக கேப்டன்சி செய்த ரஹானே இந்த போட்டியில் லேசாக திணறி உள்ளார் என்றுதான் கூற வேண்டும். நாளை இந்தியா இந்த சரிவில் இருந்து மீண்டு வர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது .

Story first published: Thursday, January 7, 2021, 14:18 [IST]
Other articles published on Jan 7, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+