Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"ஸ்பிலிட் கேப்டன்சி".. களத்தில் நடந்த தரமான சம்பவம்.. கோலியின் பதவிக்கே ஆப்பு வைக்க போகும் ரஹானே!

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை சிறப்பாக வழி நடத்தியதன் மூலம் விராட் கோலியின் கேப்டன் பதவிக்கே ரஹானே ஆபத்தாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டையும் இழந்து முதல் இன்னிங்சில் 195 ரன்கள் எடுத்தது. முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 36 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்துள்ளது.

இதில் முதல் நாள் முழுக்க இந்திய அணிதான் ஆதிக்கம் செலுத்தியது. இந்திய அணியின் கேப்டன்சி இந்த போட்டியில் மிகவும் சிறப்பாக இருந்தது.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை சிறப்பாக வழி நடத்தியதன் மூலம் விராட் கோலியின் கேப்டன் பதவிக்கே ரஹானே ஆபத்தாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆம் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் ரஹானே அணியை மிகவும் சிறப்பாக வழி நடத்தினார். முதல் விஷயம்.. இன்று ரஹானே கொடுத்த பவுலிங் ரொட்டேஷன் சிறப்பாக இருந்தது.

அஸ்வின்

அஸ்வின்

அஸ்வினை முன்பே பவுலிங் செய்ய வைத்தது. உணவு இடைவேளைக்கு பின் சிராஜை கொண்டு வந்தது என்று இன்று ரஹானே கொஞ்சம் கூட எதிர்பார்க்காத முடிவுகளை எடுத்தார். இவர் இன்று எடுத்த முடிவுகள் எல்லாம் இந்திய அணிக்கு பெரிய அளவில்உதவியது. வலுவான ஆஸ்திரேலிய அணியை சுருட்ட ரஹானேவின் இந்த திட்டமிடல்தான் உதவியது. இன்று களத்தில் ரஹானே செயல்பட்ட விதம் மிகவும் சிறப்பாக இருந்தது.

ரஹானே

ரஹானே

இன்னொரு பக்கம் ரஹானேவின் பீல்டிங் செட்டப் சிறப்பாக இருந்தது. ரஹானேதான் கேப்டன் என்றாலும் அஸ்வின், பும்ரா, பண்ட் ஆகியோர் சொல்லும் அறிவுரைகளை ஏற்றுக்கொண்டார். கேப்டன் என்ற ஈகோ இல்லாமல் செயல்பட்டார். ரோஹித் சர்மா கேப்டன்சியின் சாயல் இன்று ரஹானேவிடம் அதிகம் தென்பட்டது. இந்த நிலையில்தான் இந்திய அணியில் ஸ்பிலிட் கேப்டன்சியை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

என்ன கோரிக்கை

என்ன கோரிக்கை

அதன்படி இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக ரஹானே இருக்க வேண்டும். ஒருநாள், டி 20போட்டிகளில் வேண்டுமானால் கோலி அல்லது ரோஹித் இருக்கட்டும். டெஸ்ட் அணியில் ரஹானே கேப்டனாக இருக்க வேண்டும். ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் ஒருநாள் கேப்டன் பின்ச் இல்லை. டிம் பெயின்தான் டெஸ்ட் அணிக்கு கேப்டன்.

ரஹானே

ரஹானே

அதுபோல இந்திய டெஸ்ட் அணியிலும் ரஹானே கேப்டனாக இருக்கலாம். இதன் மூலம் கோலி தனது டெஸ்ட் பேட்டிங் மீது கவனம் செலுத்தலாம். கோலிக்கு இருக்கும் தனிப்பட்ட பிரஷர் இதனால் குறையும். அவர் இன்னும் எளிதாக சதங்களை அடிக்க முடியும் என்கிறார்கள். இன்னொரு பக்கம் இரண்டு கேப்டன் இருப்பதால் அணிக்குள் புதிய கருத்துக்கள் தோன்றும். 2021ல் நடக்க உள்ள இங்கிலாந்து தொடரில் இதை சோதனை செய்து பார்க்கலாம் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளது.

உதவி

உதவி

இது கோலிக்கும் உதவியாக இருக்கும். இந்திய அணி வீரர்களும் புதிதாக திட்டங்களை அறிந்து கொள்ள முடியும். மொத்தமாக இந்திய அணியின் வளர்ச்சிக்கு இந்த இரட்டை கேப்டன் முறை உதவியாக இருக்கும் என்று கூறுகிறார்கள். இன்று ரஹானேவின் கேப்டன்சி சிறப்பாக இருந்த நிலையில்.. இது தொடர்பாக தீவிரமான விவாதங்கள் இணையத்தில் நடந்து வருகிறது.

Story first published: Saturday, December 26, 2020, 16:52 [IST]
Other articles published on Dec 26, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+