சூரியகுமாரா..? ஸ்ரேயாஸ் ஐயரா..? யாருக்கு வாய்ப்பு- உண்மையை உடைத்த ரஹானே
கான்பூர்; நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நாளை கான்பூர் மைதானத்தில் தொடங்குகிறது. இந்தப் போட்டியில் விராட் கோலி, ரோகித் சர்மா, பும்ரா, ஷமி உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது
Recommended Video
இந்த நிலையில் காயம் காரணமாக கே.எல்.ராகுல் தொடரிலிருந்து விலகியதால், சூரியகுமார் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டார்.
ஏற்கனவே இங்கிலாந்து தொடரில் சூர்யகுமார் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டதால், இம்முறையும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஸ்ரேயாஸ் ஐயரும் அந்த இடத்திற்கு போட்டி போட்டதால் யாரை தேர்வு செய்வது என இந்திய அணி நிர்வாகத்திற்கு தலை வலியை தந்தது.

வாய்ப்பு
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தற்காலிக கேப்டன் ரஹானேவிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் உண்மையை போட்டு உடைத்துவிட்டார். நாளைய போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு தான் வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார். இதன் மூலம் இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமாகும் வாய்ப்பு ஸ்ரேயாஸ் ஐயருக்கு கிடைத்துள்ளது.

ரன்கள்
26 வயதான ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணிக்காக ஒருநாள் மற்றும் டி20 என பல போட்டிகளில் விளையாடி உள்ளார். முதல் தர போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் 54 போட்டிகளில் விளையாடி 4592 ரன்களை விளாசியுள்ளார். சராசரியாக 52 ரன்களை விளாசியுள்ள ஸ்ரேயாஸ் ஐயர் இதுவரை 12 சதங்கள் அடித்துள்ளார்.

மோசமான பார்ம்
காயத்திலிருந்து மீண்டு வந்த ஸ்ரேயாஸ் ஐயர், நடந்து முடிந்த ஐ.பி.எல். போட்டியில் சோபிக்கவில்லை. இதனால் டி20 உலகக் கோப்பை அணியில் மாற்று வீரராக தான் அணியில் இடம்பிடித்தார். மேலும் நடந்து முடிந்த நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியிலும் ஸ்ரேயாஸ் ஐயர் வெறும் 2 இன்னிங்சில் 25 ரன்களை மட்டுமே அடித்துள்ளார்.

புரியாத புதிர்
ஆனால் ஐ.பி.எல், , ஒருநாள், உள்ளூர் டெஸ்ட் போட்டியில் கலக்கிய 32 வயதான சூரியகுமார் யாதவ், சமீபத்தில் நல்ல பார்மிலும் உள்ளார். ஆனால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. ஸ்ரேயாஸ் ஐயர் சூர்யாவை விட இளம் வயது என்பதால், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. அப்படியானால், சூரியகுமாருக்கு ஏன் இங்கிலாந்து தொடரில் பங்கேற்குமாறு பாதியில் அழைப்பு விடுக்கப்பட்டது. தற்போது ஏன் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இது எப்போதும் போல் புரியாத புதிராகவே உள்ளது.


Click it and Unblock the Notifications