Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதுக்கும் மேல தாங்க முடியாது.. இதை முதலில் முடிங்க.. மனஉளைச்சலில் ரஹானே.. என்ன நடந்தது?

சென்னை: இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனை மாற்ற வேண்டும் என்பது தொடர்பாக நடந்து வரும் விவாதங்களை உடனே முடித்துக்கொள்ள வேண்டும் என்று ரஹானே கோரிக்கை வைத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு ரஹானேவின் கேப்டன்சி முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. தொடர்ந்து இரண்டாவது முறையாக பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்திய அணிவென்று சாதனை படைத்துள்ளது.

ரஹானேவின் சிறப்பான கேப்டன்சி மூலம் இந்திய அணி இந்த தொடரை வென்றது . 4-0 என்ற கணக்கில் இந்திய அணி வாஷ் அவுட் ஆகும் என்று பலரும் கணித்து இருந்தனர்.

கணிப்பு

கணிப்பு

இந்த நிலையில் கணிப்புகளை எல்லாம் தவிடுபொடியாக்கி இந்திய அணி தொடரை வென்று கோப்பையை தக்க வைத்துள்ளது. இந்த தொடர் வெற்றி காரணமாக இந்திய டெஸ்ட் அணியின் நிரந்தர கேப்டனாக ரஹானேவை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கைகளை எழுந்து வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரஹானேவை கேப்டனாக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டது.

 கோரிக்கை

கோரிக்கை

ஆனால் தனக்கு டெஸ்ட் கேப்டனாகும் விருப்பம் இல்லை. துணை கேப்டனாக நீடிப்பதில் எனக்கு சந்தோசம். கோலிதான் கேப்டனுக்கு தகுதியானவர் என்று ரஹானே வெளிப்படையாக அறிவித்துவிட்டார்.

அறிவிப்பு

அறிவிப்பு

ரஹானே இப்படி அறிவித்த பின்பும் கூட அவரை கேப்டனாக்க வேண்டும். அவரை டெஸ்ட் கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று சிலர் கோரிக்கைகள் வைக்க தொடங்கி உள்ளனர். முக்கியமாக இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் டெஸ்ட் கேப்டனாக இவரை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.

மறுப்பு

மறுப்பு

இது தொடர்பாக இணையத்தில் நிறைய விவாதங்கள் நடந்து வருகிறது. பிசிசிஐ நிர்வாகிகளுக்கு இடையிலும் இது தொடர்பாக விவாதங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த விவாதங்கள் காரணமாக ரஹானே கடும் மனஉளைச்சலில் இருக்கிறார் என்கிறார்கள்.

மனஉளைச்சல்

மனஉளைச்சல்

அதன்படி, நான் கேப்டன் பொறுப்பு வேண்டாம் என்று கூறிவிட்டேன். இது தொடர்பான விவாதங்களை உடனே நிறுத்த வேண்டும். இதற்கு மேலும் இது தொடர்பாக ஆலோசனைகளை செய்ய கூடாது. என்னுடைய கருத்தை தெளிவாக கூறிவிட்டேன்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் அதற்கு பின்பும் கூட கேப்டன்சி குறித்து பேசுவது சரியில்லை என்று ரஹானே பிசிசிஐ நிர்வாகிகளிடம் கோபமாக கூறியுள்ளார் . கேப்டன்சி குறித்த விவாதம் எழுந்தால் அது இந்திய அணியில் ஒற்றுமையை குலைக்கும். இந்திய அணிக்குத்தான் பிரச்சனை ஆகும் என்று ரஹானே கருதுகிறார்.

கூறினார்

கூறினார்

இதனால்தான் அவர் இது தொடர்பான விவாதங்களை மேற்கொள்ள வேண்டாம் என்று கூறியுள்ளார். இந்த விவாதம் குறித்து கோலியிடமும் ரஹானே பேசி உள்ளார். தனக்கு கேப்டன் ஆகும் விருப்பம் இல்லை என்பதை ரஹானே தெளிவாக கோலியிடம் தெரிவித்து உள்ளார்.

Story first published: Tuesday, February 2, 2021, 11:16 [IST]
Other articles published on Feb 2, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+