சூரரை போற்று பார்த்து அசந்து போன ரஹானே.. மாஸ்டர் படம் பார்க்க சொன்ன அஸ்வின்.. சுவாரசிய சம்பவம்
சென்னை: இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரஹானே சூரரை போற்று படத்தை பார்த்துவிட்டு பாராட்டி உள்ளார்.
இந்திய அணியில் தற்போது தமிழக வீரர்கள், தமிழ் தெரிந்த வீரர்கள் அதிக அளவில் ஆடி வருகிறார்கள். அஸ்வின், வாஷிங்க்டன் சுந்தர், நடராஜன் என்று தமிழக வீரர்கள் பலர் இந்திய அணியில் கலக்கி வருகிறார்கள்.
இதனால் தற்போது இந்திய அணியில் இருக்கும் மற்ற வீரர்களும் தமிழ்நாடு குறித்தும், தமிழ் மொழி குறித்தும் தெரிந்து கொள்ள தொடங்கி உள்ளனர். ஷமி போன்ற வீரர்கள் களத்தில் தமிழில் பேசுவதும் வழக்கம்.

எப்படி
இந்த நிலையில்தான் இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரஹானே சூரரை போற்று படத்தை பார்த்து உள்ளார். அமேசான் பிரைமில் ஆங்கில சப்டைட்டில் உதவியுடன் சூரரை போற்று படத்தை பார்த்து இருக்கிறார்.இந்த படத்தை பார்த்துவிட்ட ரஹானே மிரண்டு போய் உள்ளார்.

சூப்பர்
படம் மிகவும் சிறப்பாக இருந்தது. சூர்யாவின் நடிப்பு அற்புதமாக இருந்தது. அஸ்வின்தான் எனக்கு இந்த படத்தை பார்க்கும்படி கூறினார். அவருக்கு நன்றி என்று சூரரை போற்று படத்தை பார்த்துவிட்டு ரஹானே குறிப்பிட்டு இருந்தார் .

அஸ்வின்
இதற்கு பதில் அளித்து இருந்த அஸ்வின், மாஸ்டர் படம் பாருங்கள் ரஹானே என்று பரிந்துரை செய்துள்ளார். அஸ்வினின் இந்த பரிந்துரை இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.

வைரல்
தற்போது இந்திய அணி வீரர்கள் சென்னையில் நடக்க உள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நாளை இவர்கள் எல்லோரும் தனிமையில் இருப்பார்கள். இதனால் இந்த ஓய்வு நேரத்தில் ரஹானே தமிழ் படங்களை பார்த்து வருகிறார்.


Click it and Unblock the Notifications