Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நீங்க வழிநடத்துங்க.. அறிமுக வீரரை அனுப்பிய ரஹானே.. ஒரு கேப்டனாக உயர்ந்து நின்ற தருணம்.. சூப்பர்!

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரஹானே செய்த காரியம் ஒன்று பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றுள்ளது.

இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி திணறி வருகிறது. இந்திய அணியின் அஸ்வின், பும்ரா, சிராஜ் ஆகிய மூவரும் சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார்கள்.

இரண்டு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தொடக்கத்தில் இருந்து இந்த போட்டியில் இந்திய அணியின் பவுலர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.

பாராட்டு

பாராட்டு

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரஹானே செய்த காரியம் ஒன்று பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றுள்ளது. இந்த போட்டியில் ஒரு கேப்டனாக ரஹானே மிகவும் சிறப்பாக செயல்பட்டார். இவர் ஓவர் ரொட்டேஷன் மிகவும் சிறப்பாக இருந்தது.

பீல்டிங்

பீல்டிங்

பவுலிங் ரொட்டேஷன் மட்டுமின்றி இவர் பீல்டிங் நிற்க வைத்து இருந்த விதம், முகமது சிராஜை பயன்படுத்திய விதமும் மிகவும் சிறப்பாக இருந்தது. முக்கியமாக சிராஜுக்கு முதலில் ஓவர் கொடுக்காமல், உணவு இடைவேளை முடிந்த பின் ஓவர் கொடுத்தது பெரிய வரவேற்பை பெற்றது.

பந்து

பந்து

ஒவ்வொரு பந்திற்கும் முன் சிராஜை ரஹானே சிறப்பாக அறிவுரை வழங்கி வழிநடத்தினார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் போட்டியில் இன்று அறிமுகம் ஆன சிராஜ் தனது முதல் விக்கெட்டை எடுத்தார். மிகவும் அதிரடியாக ஆடிய மார்னஸ் விக்கெட்டை சிராஜ் எடுத்தார்.

சிராஜ்

சிராஜ்

இந்த நிலையில் இதற்கு பின் தேநீர் இடைவேளையில் இந்திய அணி பெவிலியன் திரும்பியது. அப்போது இந்திய அணியை வழி நடத்தி செல்லும்படி சிராஜிடம் கேப்டன் ரஹானே கேட்டுக்கொண்டார். இது உங்கள் முதல் போட்டி, சிறப்பாக பந்து வீசினீர்கள். நீங்களே இந்திய அணியை பெவிலியனுக்கு வழி நடத்தி செல்லுங்கள் என்று ரஹானே கேட்டுக்கொண்டார்.

சிறப்பு

சிறப்பு

ரஹானேவின் இந்த செயல் பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றுள்ளது. ஒரு கேப்டனாக ரஹானே சிறப்பாக செயல்படுகிறார். எதிர்பார்த்ததை விட ரஹானே அதிக அளவில் அதிரடி காட்டுகிறார் என்று அவரை இணையத்தில் பலரும் பாராட்டுகிறார்கள்.

Story first published: Saturday, December 26, 2020, 11:19 [IST]
Other articles published on Dec 26, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+