Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவமானம்.. புறக்கணிப்பு.. ரஹானேவின் "அந்த" ஆட்டத்திற்கு பின் இருந்த கடின உழைப்பு.. என்ன நடந்தது?

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரஹானேவின் பேட்டிங்கிற்கு பின் மிகப்பெரிய பயிற்சியும், கடின உழைப்பும் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் வெற்றிபெற்ற இந்திய அணி தற்போது மூன்றாவது டெஸ்டிற்கு தயாராகி வருகிறது. கேப்டன் ரஹானே தலைமையிலான படை மூன்றாவது டெஸ்டிற்கு தீவிரமாக பயிற்சி எடுத்து வருகிறது.

இரண்டாவது டெஸ்டில் இந்திய அணியின் வெற்றிக்கு கேப்டன் ரஹானேவின் கேப்டன்சியும், ஒரு பேட்ஸ்மேனாக அவர் அடித்த சதமும் முக்கியமான காரணமாக இருந்தது.

எப்படி

எப்படி

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ரஹானே அடித்த 112 மற்றும் இரண்டாவது இன்னிங்சில் 27 (நாட் அவுட்) ஆகியவை இந்திய அணிக்கு பெரிதும் உதவியது. முதல் இன்னிங்சில் முக்கியமாக இவரை விக்கெட் எடுக்க முடியாமல் ஆஸ்திரேலிய பவுலர்கள் கடுமையாக திணறினார்கள்.

திணறல்

திணறல்

ஆஸ்திரேலிய பவுலர்கள் கும்மின்ஸ், ஹஸல்வுட், லைன், ஸ்டார்க் என்று எல்லோருடைய பந்தையும் ரஹானே மிகவும் திறமையாக எதிர்கொண்டார். பவுன்சர், யார்க்கர், ஸ்லோ பால் என்று அனைத்து விதமான பந்துகளை ரஹானே அடித்து துவைத்தார். இவரை விக்கெட் எடுக்க முடியாமல் ஆஸ்திரேலிய பவுலர்கள் விரக்தியின் விளிம்பிற்கே சென்றனர்.

விரக்தி

விரக்தி

ஐபிஎல் தொடரில் பெரிய அளவில் ஆடாத ரஹானே இப்படி டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக ஆட காரணம் இருக்கிறது . லாக்டவுன் காலத்தில் இவர் டெஸ்ட் போட்டிகளுக்கு என்று தனியாக தயாராகி இருக்கிறார். கிட்டத்தட்ட 6 மாதம் சிவப்பு மற்றும் பிங்க் பந்துகளில் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு இருக்கிறார்.

பயிற்சி

பயிற்சி

லாக்டவுன் நேரத்தில் பல வீரர்கள் வீட்டில் முடங்கிய நிலையில் ரஹானே மிக தீவிரமாக டெஸ்ட் போட்டிகளுக்காக பயிற்சி எடுத்துள்ளார். தனிப்பட்ட பயிற்சியாளர்களை நியமித்து அனைத்து விதமான பந்துகளையும் போட வைத்து பயிற்சி மேற்கொண்டு இருக்கிறார். முக்கியமாக தனது சொந்த கிரிக்கெட் பயிற்சி மைதானத்தில் பவுலிங்கிற்கு ஏற்றபடி பிட்ச்களை வடிவமைத்து ரஹானே அதில் சிறப்பு பயிற்சிகளை மேற்கொண்டு இருக்கிறார்,

உழைப்பு

உழைப்பு

இந்திய அணியில் கோலி வெளியேறிய பின் ரஹானேவின் கேப்டன்சியை பலரும் கேள்வி எழுப்பினார்கள். அவரின் பேட்டிங் பார்ம் குறித்தும் சிலர் விமர்சனம் செய்தனர். இணையத்தில் கடுமையாக விமர்சனங்கள் வைக்கப்பட்டது. இப்படி வைக்கப்பட்ட விமர்சனங்கள் அனைத்திற்கும் ரஹானே பதில் அளித்துள்ளார்.

கடினம்

கடினம்

ஆனால் இந்த அதிரடி பேட்டிங் சாதாரணமாக ஒருநாளில் வரவில்லை. மிக நீண்ட கடின உழைப்பிற்கு பின் வந்துள்ளது. சரியாக ஆடவில்லை என்றால் வாய்ப்பு பறிபோயிவிடும் என்று ரஹானேவிற்கு தெரியும். இதன் காரணமாக மிக சரியாக திட்டமிட்டு, முறையாக பயிற்சி பெற்று ரஹானே புதிய பொலிவுடன் மீண்டும் களத்திற்கு வந்து இருக்கிறார், என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, December 31, 2020, 12:57 [IST]
Other articles published on Dec 31, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+