Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் ரஹானே கேப்டன்.. இளம் வீரர்களுக்கும் வாய்ப்பு.. முழு விவரம்!

டெல்லி: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் டி20 உலககோப்பையை இந்தியா கைப்பற்றும் என இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் பாகிஸ்தான், நியூஸிலாந்திடம் மோசமான தோல்வியை தழுவிய இந்திய அணி வெறும் கையுடன் தாயகம் திரும்பி விட்டது.

Recommended Video

Devon Conway out of WC 2021 final with broken hand | OneIndia Tamil

இந்திய அணி தற்போது நியூசிலாந்து தொடருக்கு தயாராகி வருகிறது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது.

நியூசிலாந்து தொடர்

நியூசிலாந்து தொடர்

டி20 போட்டிகள் வரும் அக்டோபர் 17-ம் தேதி முதல் தொடங்குகிறது. டெஸ்ட் போட்டிகள் நவம்பர் 25-ம் தேதி ஆரம்பிக்கிறது. உலககோப்பையில் இந்திய அணி சொதப்பியதால் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் புதிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. டி20 கேப்டன் பதவியில் இருந்து கோலி விலகியதால் ரோகித் சர்மாவுக்கு கேப்டன் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

 சீனியர் வீரர்களுக்கு ஓய்வு

சீனியர் வீரர்களுக்கு ஓய்வு

இதேபோல் விராட் கோலி, ஐஸ்பிரிட் பும்ரா உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு இதில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. வெங்கடேஷ் அய்யர், ஹர்சல் படேல், ஆவேஷ்கான் உள்ளிட்ட புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. யுஸ்வேந்திர சாஹல், ருத்ராஜ் கெய்க்வாட் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். இதேபோல் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

 ரோகித் சர்மா மறுப்பு?

ரோகித் சர்மா மறுப்பு?

விராட்கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்ட நிலையில் ரோஹித் ஷர்மாவே டெஸ்ட் தொடருக்கும் கேப்டனாக நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் ரோகித் சர்மா டெஸ்ட் தொடருக்கு ஓய்வு கேட்டுள்ளார் என்று ஒருபக்கமும், தனக்கு டெஸ்ட் கேப்டன் பதவி வேண்டாம் என்று அவர் கூறிவிட்டதாக தகவல்கள் பரவின. இதனால் துணை கேப்டன் ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்பட்டது.

 ரஹானே கேப்டன்

ரஹானே கேப்டன்

இந்த நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை இந்திய கிரிக்கெட் வாரியம்(பி.சி.சி.ஐ) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுட்டுள்ளது. 2-வது டெஸ்ட்டில் விராட் கோலி திரும்பி விடுவார் என்றும் அவர் 2-வது டெஸ்ட்டில் அணியை வழிநடத்துவார் என்றும் பி.சி.சி.ஐ கூறியுள்ளது.

கே.எஸ் பாரத், பிரசித் கிருஷ்ணா

கே.எஸ் பாரத், பிரசித் கிருஷ்ணா

முதல் டெஸ்ட்டுக்கு துணை கேப்டனாக புஜாரா நியமிப்பட்டுள்ளார். மேலும், ஐ.பி.எல்.லில் பெங்களூரு அணிக்காக விளையாடிய கே.எஸ் பாரத், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் புதுமுகமாக சேர்க்கப்பட்டுள்ளனர். ஸ்ரேயஷ் அய்யர் டெஸ்ட் அணிக்கு திரும்பி உள்ளார். முதல் டெஸ்ட்டுக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி பின்வருமாறு:-

 15 பேர் கொண்ட அணி

15 பேர் கொண்ட அணி

ரஹானே(கேப்டன்) புஜாரா(துணை கேப்டன்) கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், சுப்மன் கில், ஸ்ரேயஷ் அய்யர், சஹா(விக்கெட் கீப்பர்) கே.எஸ் பரத்(விக்கெட் கீப்பர்), ஜடேஜா, அஸ்வின், அக்சர் படேல், ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா

Story first published: Friday, November 12, 2021, 16:03 [IST]
Other articles published on Nov 12, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+