Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கேப்டன்சியில் அதிரடி காட்டிய ரஹானே.. வியந்து பார்த்த ஆஸ்திரேலிய ஜாம்பவான்.. என்ன இப்படி சொல்லிட்டார்

சிட்னி: ரஹானேவின் கேப்டன்சி இதுவரை மிகவும் சிறப்பாக இருந்தது, இந்திய அணி முன்பை விட இப்போது மிகவும் வலுவாக காணப்படுகிறது என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா சிறப்பாக ஆடி வருகிறது. இதுவரை நடந்துள்ள ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட்டை இழந்து 189 ரன்கள் எடுத்துள்ளது.

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 195 ரன்கள் மட்டும் எடுத்து இருந்தது. 5 விக்கெட்டை மட்டுமே இழந்த நிலையில் இந்தியா அதிரடியாக ஆடி வருகிறது.

 பாண்டிங்

பாண்டிங்

இந்த நிலையில் ரிக்கி பாண்டிங் அளித்துள்ள பேட்டியில், ரஹானேவின் கேப்டன்சி இதுவரை மிகவும் சிறப்பாக இருந்தது. அவர் மிகவும் நன்றாக திட்டங்களை வகுக்கிறார் . கடைசி டெஸ்ட் போட்டிக்கு பின் இந்தியா எப்படி ஆடும் என்று அச்சம் இருந்தது. இந்திய அணி மீண்டு வருமா என்று கேள்வி இருந்தது.

கேள்வி

கேள்வி

முக்கியமாக இந்திய அணியில் கேப்டன் கோலி இல்லாத போது இந்திய அணி எப்படி ஆடும் என்ற கேள்வி இருந்தது. ஆனால் யாரும் நினைத்து பார்க்காத வகையில் ரஹானே கேப்டன்சி மிகவும் சிறப்பாக இருந்தது. ரஹானேவிற்கு கீழ் இந்தியா அதிரடியாக ஆடியது.

இந்தியா எப்படி

இந்தியா எப்படி

கடந்த போட்டியை விட இந்த போட்டியில் இந்திய அணி சிறப்பாக இருந்தது. முக்கியமாக ரஹானே ஓவர் கொடுத்த விதம், பீல்டிங் செட்டப் செய்த விதம் மிகவும் சிறப்பாக இருந்தது. இந்திய அணியின் திட்டங்கள் மிகவும் சிறப்பாக அமைந்து இருந்தது.

பிளான்

பிளான்

ரஹானே பிளான் செய்யும் விதம் சிறப்பாக இருந்தது. ஒரு கேப்டனாக இருக்கும் போது அணியில் இருக்கும் வீரர்கள் உங்கள் திட்டத்தை மதிக்க வேண்டும். ரஹானே அதை சிறப்பாக செய்ய வைக்கிறார். ஸ்மித் விக்கெட் எல்லாம் திறமையான திட்டம் வகுத்து எடுக்கப்பட்ட ஒன்று.

 பாராட்டு

பாராட்டு

கேப்டன் மற்றும் பவுலரை பாராட்ட வேண்டும். ஜோ பர்ன்ஸ் விக்கெட் எல்லாம் எதிர்பார்க்காத ஒன்று. இப்படித்தான் திட்டங்களை வகுக்க வேண்டும். முகமது சிராஜை ரஹானே மிகவும் சிறப்பாக பயன்படுத்தினார். இன் ஸ்விங்கர், அவுட் ஸ்விங்கர் என்று சிராஜ் பவுலிங் செய்தார். அதற்கு ஏற்றபடி ரஹானே பீல்டிங் செட் செய்தார்.

சிறப்பு

சிறப்பு

பல திட்டங்களை ரஹானே வகுத்து இருக்க வேண்டும். இல்லையென்றால் இவ்வளவு சிறப்பாக ஆட முடியாது. ரஹானேவின் திட்டமிடல் மற்றும் அதை செயல்படுத்தும் விதத்தை பாராட்ட வேண்டும், என்று பாண்டிங் குறிப்பிட்டுள்ளார். ரிக்கி பாண்டிங் பயிற்சி கொடுக்கும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில்தான் ரஹானேவும் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோலி

கோலி

ரஹானேவின் கேப்டன்சியை பாண்டிங் தொடங்கி பலரும் பாராட்டி வருகிறார்கள். இதனால் ஒரு வகையில் கோலிக்கு நெருக்கடி ஏற்பட தொடங்கி உள்ளது. இந்திய டெஸ்ட் அணியின் நிரந்தர கேப்டனாக ரஹானே ஆக வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள்.

Story first published: Sunday, December 27, 2020, 23:07 [IST]
Other articles published on Dec 27, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+