கவாஸ்கர், சச்சின், கோலி சாதனை... 2வது முறையாக செஞ்சிருக்காரு ரஹானே... என்னன்னு பாருங்க!
மெல்போர்ன் : மெல்போர்ன் கௌரவ போர்டில் அஜிங்க்யா ரஹானேவின் பெயர் இரண்டாவது முறையாக இடம்பெற்றுள்ளது.
கடந்த 2014ல் மெல்போர்னில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரஹானே 147 ரன்களை அடித்து இந்த கௌரவ போர்டில் முதல் முறையாக இடம் பிடித்திருந்தார்.
முன்னாள் வீரர்கள் சச்சின், கவாஸ்கர் உள்ளிட்ட 8 இந்தியர்கள் இந்த போர்டில் இடம்பெற்றுள்ளனர்.

2வது டெஸ்ட் போட்டி
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் மெல்போர்னில் நடந்து முடிந்துள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கேப்டனாக செயல்பட்டதுடன் இல்லாமல் பேட்ஸ்மேனாகவும் அதிரடி கிளப்பி 112 ரன்களை அடித்திருந்தார் அஜிங்க்யா ரஹானே. இதையடுத்து அவரது பெயர் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தின் கௌரவ போர்டில் இரண்டாவது முறையாக இடம்பெற்றுள்ளது.

போர்டில் இடம்பெற்ற ரஹானே
கடந்த 2014ல் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக விளையாடி 147 ரன்களை அடித்திருந்தார் ரஹானே. இதையடுத்து அவரது பெயர் மெல்போர்னில் கௌரவ போர்டில் முதல் முறையாக இடம்பெற்றது. இந்நிலையில் தற்போது 2வது முறையாக அவரது பெயர் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து முன்னதாக பிசிசிஐ ரஹானேவிற்கு பாராட்டு தெரிவித்திருந்தது.

வீரர்கள் ஆர்வம்
இந்த போர்டில் வீரர்களின் பெயர் இடம்பெற ஒரே இன்னிங்சில் சதம் அல்லது 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்க வேண்டியது அவசியம். 100 ஆண்டுகளை கடந்துள்ள மெல்போர்ன் மைதானத்தின் இந்த போர்டில் தங்களுடைய பெயர் இடம்பெற வீரர்கள் ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

சச்சின், கவாஸ்கர் வழியில் ரஹானே
இந்த போர்டில் இந்தியாவின் முன்னாள் வீரர் வினூ மன்கத்தின் பெயர் இரண்டு முறை இடம்பெற்றுள்ள நிலையில், தற்போது இரண்டாவது வீரராக ரஹானே அந்த பெருமையை தட்டி சென்றுள்ளார். மேலும் சுனில் கவாஸ்கர், குண்டப்பா ரங்கநாத் விஸ்வநாத், சச்சின் டெண்டுல்கர், விரேந்திர சேவாக், விராட் கோலி மற்றும் சத்தீஸ்வர் புஜாரா ஆகிய வீரர்களின் பெயர்கள் இந்த போர்டில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications