"இங்க வாங்க லைன்".. போட்டிக்கு பின் ரஹானே செய்த காரியம்.. மனிதனாக உயர்ந்து நின்ற அந்த நிமிடம்!
சிட்னி: ஆஸ்திரேலிய வீரர் நாதன் லைனிடம் இந்திய அணியின் கேப்டன் ரஹானே நடந்து கொண்ட விதம் பாராட்டுகளை பெற்றுள்ளது.
ஆஸ்திரேலிய அணியை தி கப்பா மைதானத்தில் 33 வருடமாக எந்த அணியும் டெஸ்ட் போட்டிகளில் வீழ்த்தியது இல்லை என்ற வரலாற்றை இந்திய அணி இன்று திருத்தி எழுதி உள்ளது. இளம் வீரர்களை வைத்து ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது.
கடைசி டெஸ்ட் போட்டியில் வென்று பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தக்க வைத்துள்ளது. இந்திய டெஸ்ட் வரலாற்றில் இது மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இந்த டெஸ்ட் போட்டியில் வென்ற பின் கேப்டன் ரஹானே இன்று வீரர்கள் எல்லோருக்கும் வாழ்த்து தெரிவித்தார். இளம் வீரர்கள் நன்றாக விளையாடினார்கள். கடைசி வரை போராடினார்கள் என்று இளம் வீரர்களுக்கு ரஹானே பாராட்டு தெரிவித்தார். இந்த வெற்றியை நாங்கள் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.

ரஹானே
இது எங்களுக்கு மிகப்பெரிய சந்தோசம் அளிக்கிறது. இந்த மகிழ்ச்சியை எப்படி விவரிப்பது என்று தெரியவில்லை. வீரர்கள் எல்லோரும் கடைசி வரை போராடினார்கள். அணிக்காக களத்தில் நின்றனர். இதுதான் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம். ஒவ்வொரு வீரரையும் நினைத்தால் பெருமையாக இருக்கிறது என்று ரஹானே குறிப்பிட்டார்.

பேட்டி
இதன்பின் ஆஸ்திரேலிய வீரர் நாதன் லைனுக்கு ரஹானே இந்திய அணியின் டீ சர்டை பரிசாக வழங்கினார். இன்றைய போட்டி ஆஸ்திரேலிய வீரர் நாதன் லைனுக்கு 100வது போட்டியாகும். ஆனால் இந்த போட்டி லைனுக்கு வெற்றிகரமான போட்டியாக முடியவில்லை.

பாராட்டு
ஆனாலும் அவரை பாராட்டும் வகையில் ரஹானே அவருக்கு இந்திய அணியின் ஜெர்சியை வழங்கினார். இந்திய வீரர்களை மோசமான வார்த்தைகள் மூலம் ஆஸ்திரேலிய வீரர்கள் தொடர்ந்து தாக்கி வந்தனர். பல முறை ஸ்லெட்ஜிங் செய்து மோசமாக நடந்து கொண்டனர்.

சிறப்பு
இந்திய அணி நினைத்தால் வெற்றிக்கு பின் ஆஸ்திரேலிய வீரர்களை சீண்டி இருக்க முடியும். ஆனால் இந்திய வீரர்கள் மிகவும் தன்மையோடு நடந்து கொண்டனர். அதிலும் ரஹானே ஒரு கேப்டனாக, ஒரு மனிதனாக ஆஸ்திரேலிய வீரர் ஒருவருக்கு இந்திய அணியின் ஜெர்சியை பரிசளித்து உயர்ந்து நின்றுள்ளார்.


Click it and Unblock the Notifications