For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பிளேயிங் லெவனில் பாண்ட்யாவா? அக்சர் படேலா? சார்... இதுக்கு ரஹானேவின் ஷாக் ரியாக்ஷனை பாருங்க!

சென்னை: இந்திய தேர்வுக்குழுவுக்கு ஆல்ரவுண்டர் தேர்விலும் பெரும் சிக்கல் காத்திருக்கிறது. ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்ட்யா, அக்சர் படேல் இடையே கடும் போட்டி நடக்கிறது.

பிளேயிங் லெவனில் பாண்ட்யாவா? அக்சர் படேலா? என்பதுதான் இப்போதைய கேள்வியாக உள்ளது.

இது தொடர்பான ஒரு கேள்விக்கு, ஹார்திக் பாண்ட்யா ஒரு பந்து வீச்சாளராகவும், ஒரு பேட்ஸ்மேனாகவும் அவர் பங்களிப்பு செய்துள்ளார் என்று துணை கேப்டன் ரஹானே பதில் கூறினார்.

இந்தியா ரெடி

இந்தியா ரெடி

இந்தியா-இங்கிலாந்து முதல் டெஸ்ட் நாளை வெற்றிகரமாக தொடங்க உள்ளது. நமது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் இன்றி போட்டி அரங்கேற உள்ளது. ரசிகர்கள் ஆதரவு நேரடியாக கிடைக்காவிட்டாலும், இங்கிலாந்தை போட்டு தாக்க கோலி& கோ ரெடியாக உள்ளது. ஆனால் முதல் டெஸ்டில் பிளேயிங் லெவனை தேர்ந்தெடுப்பபதுதான் இப்போது சிக்கலே உள்ளது.

அக்சர் படேல் அணியில் எதற்கு?

அக்சர் படேல் அணியில் எதற்கு?

ஸ்பின்னர்கள் தேர்விலும், பாஸ்ட் பவுலர்கள் தேர்விலும் குழப்பம் நீடிக்க, ஆல்ரவுண்டர் தேர்விலும் பெரும் சிக்கல் காத்திருக்கிறது. ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்ட்யா இந்தியாவின் பெஸ்ட் பினிஷர் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. அதே வேளையில் யாரும் எதிர்பாராதவிதமாக டெஸ்ட் தொடருக்கு ஆல்ரவுண்டர் அக்சர் படேல் நீண்ட நாட்களுக்கு பிறகு எடுத்து இருப்பது மில்லியன் டாலர் கேள்விகளை எழுப்பியுள்ளது.

இருவருமே திறமைசாளிகள்

இருவருமே திறமைசாளிகள்

பொதுவாக இடதுகை ஸிபின்னர்கள் இங்கிலாந்துக்கு எதிராக சிறப்பாக செயல்படுவார்கள். ரவீந்திர ஜடேஜா காயம் அடைந்ததால் இடது கை ஸிபின்னர்& ஆல்ரவுண்டர் அக்சர் படேல் தேர்வு செய்யப்பட்டு இருபப்தாக பலரும் கூறுகின்றனர். ஆனால் பிளேயிங் லெவனில் இவர்கள் இருவரில் யார்? என்பதுதான் இப்போதைய கேள்வி. ஹார்திக் பாண்ட்யா இடம் பெற்றால் பந்து வீசுவாரா என்ற கேள்வியும் தவிர்க்க முடியாது. அக்சர் படேல் பவுலிங்கும் வீசுவார், கொஞ்சம் பேட் செய்யும் திறமையும் அவருக்கு இருப்பதால் புறந்தள்ளி விட முடியாது.

இருவரில் யார்?

இருவரில் யார்?

நமக்கு இருக்கும் இதுபோன்ற கேள்வியைத்தான் துணை கேப்டன் ரஹானேவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். ஹார்திக் பாண்ட்யா பந்து வீசுவாரா? வலைபயிற்சியில் அவர் பந்து வீசினாரா? நீண்ட நாட்களுக்கு பிறகு அக்சர் படேல் எடுக்கப்பட்ட காரணம் என்ன? இருவரில் யார் பிளேயிங் லெவனில் இடம்பெறுவார்கள்? என்ற கேள்விகள் முன் வைக்கப்பட்டது.

ரஹானே சொல்வது என்ன?

ரஹானே சொல்வது என்ன?

அதற்கு ரஹானே இருவரையும் விட்டுக் கொடுக்காமல் பேசினார். ஹார்டிக் பாண்ட்யாவை அணியில் இருக்கிறார், அவர் அணிக்காக மிகவும் கடினமாக உழைத்து வருகிறார். ஒரு பந்து வீச்சாளராகவும், ஒரு பேட்ஸ்மேனாகவும் அவர் பங்களிப்பு செய்துள்ளார். அக்சர் பட்டேல் அணியில் இடம்பெறுவாரா? என்பது நாளைதான் தெரிய வரும். அணியில் யார் சேர்க்கப்படுகிறார்கள் என்பதை நீங்கள் காத்திருந்து பார்க்க வேண்டும் என்று ரஹானே பதில் கூறினார்.

Story first published: Thursday, February 4, 2021, 12:05 [IST]
Other articles published on Feb 4, 2021
English summary
There is a big problem waiting for the Indian selectors in the all-rounder selection as well. A fierce rivalry is going on between all-rounder Hardik Pandya and Akshar Patel
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+