தென்னாப்பிரிக்க தொடரில் புதிய ரஹானே? ஃபார்ம்க்கு திரும்ப ரஹானே போட்ட பிளான்..!! நடந்தது என்ன?
மும்பை: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் தவிர்க்க முடியாத வீரராக இருந்த ரஹானே..தற்போது அவரது இடத்தை தக்க வைத்து கொள்ள போராடுகிறார்
ரஹானே ஒரு சிறந்த வீரர் என்பதில் மாற்று கருத்து யாருக்கும் இல்லை. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து,. மேற்கிந்தியத் தீவுகள் மண்ணில் சதம் விளாசி தனது திறமையை நிரூபித்தவர்

தடுமாறும் ரஹானே
ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக ரஹானே ஒரே ஒரு சதம் மட்டும் தான் அடித்துள்ளார். இந்த 2 ஆண்டுகளில் அவரது சராசரி 30க்கு கீழ் சென்றுள்ளது. நடப்பு ஆண்டில் ரஹானே 12 டெஸ்ட்களில் விளையாடி 411 ரன்கள் சேர்த்தார். சராசரி 19.27, 2020 ஆம் ஆண்டில் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 272 ரன்கள் மட்டும் அடித்துள்ளார். நடந்து முடிந்த நியூசிலாந்து தொடரில் ரஹானே முதல் டெஸ்டில் 35 மற்றும் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால்,2வது டெஸ்டில் ரஹானேவுக்கு காயம் என்று கூறி அணியிலிருந்து நீக்கப்பட்டார்

கடைசி வாய்ப்பு
மேலும் இந்திய டெஸ்ட் அணியில் துணை கேப்டன் என்ற பொறுப்பில் இருந்த ரஹானேவின் பதவியும் பறிக்கப்பட்டது. இவ்வளவு மோசமான பார்மில் இருந்தும் அவர் தென்னாப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். இது தனக்கு கடைசி வாய்ப்பு என்பதால், இந்த தொடரில் ரன் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் ரஹானே உள்ளார்.

நல்ல ஆட்டம்
தென்னாப்பிரிக்க மண்ணில் இதுவரை ரஹானே 3 டெஸ்ட்டில் விளையாடி266 ரன்களை எடுத்துள்ளார். இதில் அதிகபட்சமாக 96 ரன்கள் அடங்கும்.சராசரியாக 53 ரன்கள் அடித்துள்ளார். இதனால் தென்னாப்பிரிக்க தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைப்பது கிட்டதட்ட உறுதி. இதனால் இழந்த ஃபார்மை மீட்க ரஹானே ஒரு முடிவு எடுத்தார்

வினோத் காம்பிளி
நியூசிலாந்து தொடர் முடிந்ததும், நேராக ரஹானே , சச்சினின் நண்பரும், பிரபல கிரிக்கெட் வீரருமான வினோத் காம்பிளி வீட்டுக்கு சென்றுஅவருடன் பயிற்சி மேற்கொண்டார். அவருடன் ரிஷப் பண்டும் கூட சென்றுள்ளார். தென்னாப்பிரிக்கா சூழலை எவ்வாறு எதிர்கொள்வது, பேட்டிங்கில் தாம் செய்த தவறு போன்ற விசயங்களை வினோத் காம்பிளியிடம் ரஹானேவும், ரிஷப் பண்டும் ஆராய்ந்து கற்று கொண்டனர். சுமார் 3 நாட்களுக்கு மேல் இந்த பயிற்சி நடந்துள்ளது. இதனால் புதிய ரஹானேவை நாம் காண வாய்ப்புள்ளது,


Click it and Unblock the Notifications