For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐ.பி.எல்.வேற...டெஸ்ட் வேற... ஐ.பி.எல். சூழல் இங்கிலாந்து வீரர்களுக்கு கைகொடுக்காது..ரஹானே கணிப்பு!

சென்னை: ஐ.பி.எல் போட்டியில் பங்கேற்ற சூழல் இங்கிலாந்து அணிக்கு சாதகமாக இருக்குமா? என்ற கேள்விக்கு பதிலளித்த ரஹானே, டெஸ்ட் கிரிக்கெட்டும், ஐபிஎல் போட்டியும் முற்றிலும் வேறுபட்டவை என்றார்.

ஐ.பி.எல்.லில் பங்கேற்கும் வெளிநாட்டு வீரர்களுடன், இந்திய கிரிக்கெட் வீரர்கள் விளையாட்டின் தந்திரங்களை, உத்திகளை பகிர்ந்து கொள்ள மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.

இங்கிலாந்தின் எந்த தனி வீரர்கள் பற்றியும் கவலை கொள்ள மாட்டோம். ஒரு அணியாக எங்களது திறமையை வெளிப்படுத்துவோம் என்றும் ரஹானே தெரிவித்தார்.

ரசிகர்களுக்கு மெகா விருந்து

ரசிகர்களுக்கு மெகா விருந்து

பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியா-இங்கிலாந்து முதல் டெஸ்ட் நாளை தொடங்க உள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு இந்தியாவில் சர்வதேச கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளதால் ரசிகர்களுக்கு பெரும் விருந்து காத்திருக்கிறது. முதலாவது டேஸ்டில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லாவிட்டாலும், 2-வது டெஸ்டில் ரசிகர்கள் போட்டியை நேரடியாக கண்டு ரசிக்கலாம்.

விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது

விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது

3 ஸ்பின்னர்கள், 2 பாஸ்ட் பவுலர்கள், 6 பேட்ஸ்மேன்கள் மூலம் இந்தியா இங்கிலாந்துக்கு தாக்குதல் கொடுக்க ஆயத்தமாக உள்ளது. இங்கிலாந்து அணியும் சளைத்தவை அல்ல. அங்கும் திறமையான வீரர்கள் இருக்கின்றனர். தரமான வீரர்கள் மோதிக் கொள்ளும் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. முன்பெல்லாம் ஒரு நாடு, வெளிநாட்டு மைதானத்தை பற்றி தெரிந்து கொள்வது மிகவும் சிரமம்.

இந்திய சூழ்நிலை இங்கிலாந்துக்கு சாதகமா?

இந்திய சூழ்நிலை இங்கிலாந்துக்கு சாதகமா?

அங்குள்ள சீதோஷ்ண நிலை, சூழல் ஆகியவற்றை தாக்கு பிடித்து விளையாடியாக வேண்டும். ஆனால் அனைத்து நாடுகளிலும் அடிக்கடி விளையாடுவதால் ஒரு நாட்டின் தட்ப வெப்ப நிலை வீரர்களுக்கு பழகி விடுகிறது. இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல். போட்டிகள் இதற்கு மிகவும் உதாரணாமாக உள்ளது. ஐ.பி.எல். போட்டிகளில் வெளிநாட்டு வீரர்கள் விளையாடுவதால் அவர்களுக்கு இந்திய சூழ்நிலை அத்துப்படியாகி உள்ளது.

ரஹானே பதில் என்ன?

ரஹானே பதில் என்ன?

தற்போது டெஸ்டில் விளையாட உள்ள இங்கிலாந்தின் ஜோஃப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ், பட்லர் உள்ளிட்ட சில வீரர்கள் ஐ.பி.எல் போட்டியில் பங்கேற்று உள்ளனர். இந்திய வீரர்களுடன் நெருங்கி பழகி உள்ளனர். இந்த சூழ்நிலை இந்த தொடரில் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்று துணை கேப்டன் ரஹானேவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலத்த ரஹானே கூறியதாவது:-

விளையாட்டு தந்திரம் பகிர மாட்டோம்

விளையாட்டு தந்திரம் பகிர மாட்டோம்

ஜோஸ் பட்லர், ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் பென் ஸ்டோக்ஸ் போன்ற சிறந்த வீரர்கள் ஐ.பி.எல்.லில் பங்கேற்று இருக்கலாம். ஆனால் அவர்கள் இந்திய வீரரின் மனநிலையையோ அல்லது அவரது உத்தியையோ புரிந்து கொள்வார்கள் என்பது அர்த்தமல்ல. ஐ.பி.எல்.லில் பங்கேற்கும் வெளிநாட்டு வீரர்களுடன், இந்திய கிரிக்கெட் வீரர்கள் விளையாட்டின் தந்திரங்களை, உத்திகளை பகிர்ந்து கொள்ள மாட்டார்கள்.

பென் ஸ்டோக்ஸ் பற்றி கவலையில்லை

பென் ஸ்டோக்ஸ் பற்றி கவலையில்லை

மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டும், ஐபிஎல் போட்டியும் முற்றிலும் வேறுபட்டவை. அவர்களின் பந்து வீச்சாளர்கள் இங்கே எப்படி பந்து வீசுவார்கள்? என்பது எங்களுக்குத் தெரியும். பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் இருவரும் மிகவும் நல்ல வீரர்கள். அவர்கள் இங்கிலாந்துக்கு மிகவும் சிறப்பாக செயல்பட்டனர், ஆனாலும் நாங்கள் எந்த தனி வீரர்கள் பற்றியும் கவலை கொள்ள மாட்டோம். ஒரு அணியாக எங்களது திறமையை வெளிப்படுத்துவோம் என்று ரஹானே கூறினார்.

Story first published: Thursday, February 4, 2021, 12:39 [IST]
Other articles published on Feb 4, 2021
English summary
Will the environment in the IPL be favorable for the England team? Answering a question, Rahane said that Test cricket and IPL matches are completely different
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+