Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரஹானேவுக்காக பலிகாடு செய்ய ஒரு வீரர் தயார்.. ஸ்ரேயாஸ் இல்ல..இது வேற..!!

மும்பை; இந்தியா,நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி வரும் 3ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.

இன்று மழை பொழிந்ததால் இரு அணிகளின் பயிற்சி முகாமும் ரத்து செய்யப்பட்டது. இந்தப் போட்டியில் விராட் கோலி அணிக்கு கேப்டனாக திரும்புகிறார்

Rahane set to Play in Mumbai test Despite Poor Form

விராட் கோலியின் வருகையால் பார்மில் இல்லாத ரஹானே அணியிலிருந்து நீக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரஹானேவிற்கு மீண்டும் வாய்ப்பு வழங்க பயிற்சியாளர் டிராவிட் முடிவு எடுத்துள்ளார்.

ரஹானேவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால் , கடந்த போட்டியில் சதம் விளாச ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்தது. இங்கு தான் டிராவிட் ஒரு டிவிஸ்ட் வைத்துள்ளார். ஸ்ரேயாஸ் ஐயரை நீக்கினால் அது சரியாக இருக்காது என்பதால், நடுவரிசையில் ரஹானேவுடன், அவரும் விளையாடுவார்.

தொடக்க வீரராக உள்ள மாயங் அகர்வாலை அணியிலிருந்து நீக்குவதே அந்த பிளான். அகர்வாலை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக புஜாரா இல்லை விரித்மான் சாஹாவை தொடக்க வீரராக களமிறக்குவதே டிராவிட் செய்துள்ள முடிவு என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஒரு வேலை ஆடுகளம் ஈரப்பதமாக இருந்து புற்கள் இருந்தால் 3 சுழற்பந்துவீச்சாளரில் ஒருவரை அமரவைத்துவிட்டு, 3 வேகப்பந்துவீச்சாளருடன் இந்தியா களமிறங்கவும் வாய்ப்பு உள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டு முதல் இந்திய டெஸ்ட் அணியில் உள்ள ரஹானே இதுவரை 79 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். இதில் ஒரு முறை கூட அவர் தனது சொந்த ஊரான மும்பையில் விளையாடவில்லை. இதனால் இம்முறை ஃபார்ம் காரணமாக அந்த வாய்ப்பும் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.

Story first published: Wednesday, December 1, 2021, 20:54 [IST]
Other articles published on Dec 1, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+