Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யாரும் கண்டுகொள்ளவில்லை.. "கேப்டன்" ரஹானே உடனே இதை சரிசெய்ய வேண்டும்.. இல்லையெனில் சிக்கல்தான்!

சிட்னி: இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ரஹானே சிறப்பாக செயல்பட்டு
வந்தாலும் சில இடங்களில் அவர் கொஞ்சம் சொதப்புகிறார். இதை அவர் உடனே சரி
செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வருகிறது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்னும் சில
நாட்களில் நடக்க உள்ளது. இதற்காக இரண்டு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு பின் கேப்டன் கோலி நாடு
திரும்பினார். இதனால் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக ரஹானே நியமிக்கப்பட்டுள்ளார்.

எப்படி

எப்படி

ஒரு கேப்டனாக ரஹானே சிறப்பாகவே செயல்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்திய அணியின் கேப்டன் ரஹானேவின் முறையான திட்டமிடல் மற்றும் கேப்டன்சி

பெரிய அளவில் பாராட்டிற்கு உள்ளாகி உள்ளது. கேப்டனாக ரஹானே எடுத்த டிவுகள் எல்லாமே மிகவும் சிறப்பாகவும், ஆச்சர்யம் அளிக்க கூடிய வகையிலும் இருந்தது. பலரும் ரஹானேவை பாராட்டி வருகிறார்கள்.

 ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் இன்னொரு பக்கம் ரஹானே செய்த சில தவறுகள் வெளியேற தெரியாமல் போய்விட்டது. முதல் விஷயம், டிஆர்எஸ்ஸின் போது முடிவு எடுப்பதில் ரஹானே

திணறுகிறார். இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் தேவையின்றி சிராஜ் ஓவரில் ரஹானே ரிவ்யூ கேட்டார். அவருக்கு ரிவ்யூ கேட்கும் விருப்பம் இல்லை என்றாலும் சிராஜ் வற்புறுத்தியதால் ரஹானே ரிவ்யூ கேட்டார்.

ரிவ்யூ

ரிவ்யூ

அதில் விக்கெட் விழவில்லை. இளம் வீரர்கள் வற்புறுத்துவதால் கோலி, தோனி எல்லாம் ரிவ்யூ கேட்க மாட்டார்கள். ஆனால் ரஹானே மறுப்பு தெரிவிக்காமல் அனைத்திற்கும் தலையாட்டுகிறார். இதை ஒரு கேப்டனாக ரஹானே கொஞ்சம் தவிர்க்க வேண்டும். அதேபோல் ரஹானே நிற்கவைக்கும் பீல்டர்களை விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் சில சமயங்களில் மாற்றுகிறார்.

கேட்பதில்லை

கேட்பதில்லை

இதை ரஹானே பெரிதாக கண்டுகொள்வது இல்லை. ரஹானே பவுண்டரி லைனில் நிற்கும்போது ரிஷப் பந்த் இப்படி செய்தால் கூட ஓகே . ஆனால் ரஹானே ஸ்லிப்பில், நிற்கும் போது கூட ரிஷப் பந்த் கேப்டன் போல செயல்படுகிறார். இதையும் அவர் கொஞ்சம் கட்டுப்படுத்த வேண்டும். எல்லோரும் களத்தில் ஆர்டர் போடுவது வரும் நாட்களில் ஈகோ பிரச்னைக்கு வழி வகுக்கும்.

ஓவர்

ஓவர்

அதேபோல் பும்ராவை ரஹானே புதிய பந்தில் இன்னும் அதிகம் பயன்படுத்த வேண்டும். உணவு இடைவேளைக்கு பின் ரஹானே பும்ராவை பெரிய அளவில் பயன்படுத்துவது இல்லை.

இன்னும் கொஞ்சம் அதிகம் இவரை பயன்படுத்தினால் ஆஸ்திரேலிய அணியின் விக்கெட்டுகளை வேகமாக எடுக்க முடியும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கூறி வருகிறார்கள்.

Story first published: Friday, January 1, 2021, 17:27 [IST]
Other articles published on Jan 1, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+