Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதுக்கும் மேல முடியாது.. மைதானத்தில் டயர்ட் ஆன ஆஸி. வீரர்கள்.. டிராவிட்டை கண் முன் நிறுத்திய ரஹானே!

சிட்னி: இந்திய அணியின் கேப்டன் ரஹானேவின் பேட்டிங் யுக்தியால் ஆஸ்திரேலிய பவுலர்கள் கடுமையாக திணறி வருகிறார்கள்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மோசமாக தோல்வி அடைந்த நிலையில் தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்த தொடங்கி உள்ளது. அதிலும் இன்று ரஹானே பேட்டிங் மிகவும் சிறப்பாக அமைந்தது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மயங்க் அகர்வால், விஹாரி, புஜாரா சரியாக ஆடாத நிலையில் கேப்டன் ரஹானே மிகவும் அதிரடியாக ஆடி வருகிறார்

அட்டாக் பவுலிங்

அட்டாக் பவுலிங்

இன்று ஆஸ்திரேலிய அணியின் பவுலிங் மிகவும் சிறப்பாகவே இருந்தது. ஆஸ்திரேலிய அணியின் பவுலிங் அட்டாக்கிங் ஸ்டைலில் இருந்தது. ஒவ்வொரு பந்திலும் விக்கெட் எடுக்க வேண்டும் என்று திட்டமிட்டு பவுலிங் செய்தனர். இது தொடக்கத்தில் கை கொடுத்தது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் ரஹானே களமிறங்கிய பின் கேம் மாறியது. ஆஸ்திரேலிய பவுலர்கள் போட்ட அட்டாக்கிங் பந்துகளை எல்லாம் சிறப்பாக ரஹானே எதிர்கொண்டார். ஸ்டம்பிற்கு வரும் பந்துகளை தடுத்தார், தேவையில்லாத பந்துகளை தொட கூடவில்லை. அடிக்க முடிந்த பந்துகளை மட்டும் அடித்து கொஞ்சம் கொஞ்சமாக ரன் எடுத்தார் .

டிராவிட்

டிராவிட்

டிராவிட் டெஸ்ட் அணிக்கு ஆடும் போது எப்படி.. தேவையான பந்துகளை மட்டுமே எதிர்கொள்வாரா அப்படித்தான் இன்று ரஹானே ஆடினார். டிராவிட்டின் பேட்டிங் ஸ்டைலை இந்த ரஹானே அப்படியே கண் முன் நிறுத்தினார். மிகவும் பொறுமையாக, அவசரப்படாமல் ரஹானே பேட்டிங் செய்தார்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

தொடக்கத்தில் ரஹானே விக்கெட்டை எடுக்க ஆஸ்திரேலிய பவுலர்கள் தீவிரமாக முயன்றனர். ஆனால் போக போக ரஹானே விக்கெட்டை எடுக்க முடியாமல் ஆஸி பவுலர்கள் டயர்ட் ஆனார்கள். அதிலும் ஹஸல்வுட், கும்மின்ஸ் இருவரும் தங்கள் முகத்தில் களைப்பை காட்ட தொடங்கினார்கள்.

சிறப்பான ஆட்டம்

சிறப்பான ஆட்டம்

அதிலும் 70 ரன்கள் கடந்த பின் ரஹானே அதிரடியாக பவுண்டரிகளை அடிக்க தொடங்கினார். அதிலும் ஹஸல்வுட்ல், கும்மின்ஸ் பவுலிங்கில் எல்லாம் அசால்ட்டாக ரஹானே பவுண்டரிகளை அடித்தார். தற்போது வர 89 ரன்கள் எடுத்துள்ள ரஹானே ஒரு கேப்டனாக அணியை வழிநடத்தி உள்ளார்.

Story first published: Sunday, December 27, 2020, 12:52 [IST]
Other articles published on Dec 27, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+