413 ரன் எடுத்தா ஜெயிச்சுக்கோ... இலங்கைக்கு இலக்கை நிர்ணயித்தது இந்தியா
கொழும்பு: 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற 413 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா.
இந்தியா, இலங்கை இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கொழும்பில் நடந்து வருகிறது. இரு அணிகளும் மாறி மாறி ரன்களைக் குவித்து வைத்துள்ளன. இதனால் போட்டி டிராவில் முடிவதற்கான வாய்பபுகள் அதிகமாக உள்ளன.
முதலில் பேட் செய்த இந்தியா 393 ரன்களைக் குவித்தது. அடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி 306 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து ஆடிய இந்தியா தனது 2வது இன்னிங்ஸை 8 விக்கெட் இழப்புக்கு 325 ரன்கள் என்று டிக்ளேர் செய்தது. இதனால் இலங்கை அணிக்கு 413 ரன்கள் என்ற வெற்றி இலக்கை இந்தியா நிர்ணயித்தது.
இதையடுத்து தனது 2வது இன்னிங்ஸை தற்போது இலங்கை ஆடி வருகிறது.

ரஹானே அபார சதம்
முன்னதாக இன்றைய 2வது இன்னிங்ஸ் ஆட்டத்தின்போது இந்திய வீரர் அஜிங்கியா ரஹானே சதம் போட்டார். நேற்று 28 ரன்களில் ஆட்டத்தை முடித்திருந்த அவர் இன்று அருமையான சதம் போட்டார்.

முரளி விஜய் 82
மறுபக்கம் முரளி விஜய் சிறப்பாக ஆடி 82 ரன்களைக் குவித்தார். முரளி விஜய் சதம் போடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வீழ்ந்து விட்டார். ஆனாலும் ரஹானேவின் ரன் வேகம் குறையவில்லை.

நிதானமான ஆட்டம்
முரளி விஜய்யுடன் இணைந்து பிரமாதக ஆடி வந்த ரஹானே, அவர் ஆட்டமிழந்து சென்றதும் நிதானத்திற்கு மாறினார். நிதானமாக, பொறுமையாக ஆடி சதம் போட்டார்.

243 பந்துகளில்
ரஹானே 243 பந்துகளில் 126 ரன்களைக் குவித்தார் ரஹானே. இதில் 10 பவுண்டரிகளும் அடக்கம்.

அடுத்து என்னாகும்
தற்போது இலங்கை அணிக்கு இந்தியா 413 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது. நாளை ஒரு நாள் ஆட்டம் பாக்கி உள்ளது. இந்திய பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டால் இலங்கையை சுருட்டி வெற்றி வாகை சூட முடியும். அப்படி நடக்காமல் போனால் இலங்கை வீரர்கள் கட்டையைப் போட்டு ஆடி ஆட்டத்தை இறுதி நாள் முடிவு வரை இழுத்து விட்டால் டிராவில் முடிந்து விடும்.


Click it and Unblock the Notifications