Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னிடம் தேர்வுக்குழுவினர் பேசுவதே இல்லை.. ஆஸ்திரேலிய தொடரில் நான் விளையாடி இருக்கனும்.. ரஹானே

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ரஹானே ரஞ்சி கோப்பையில் சட்டீஸ்கர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணிக்காக 159 ரன்கள் விளாசினார். 37 வயதான ரகானே இன்னும் தன்னுடைய திறமையை நிரூபித்து வருகிறார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், வயது என்பது எனக்கு வெறும் எண்ணிக்கை மட்டும் தான் களத்தில் எப்படி விளையாடுகின்றோம். நாம் எவ்வளவு உத்வேகத்துடன் இருக்கின்றோம் என்பதை பொறுத்துதான் அனைத்திலும் இருக்கின்றது.

Rahane

களத்திற்குள்ளே கடினமாக உழைக்க வேண்டும். சிவப்பு நிற பந்து கிரிக்கெட்டில் அனுபவம் என்பது மிகவும் முக்கியம். நான் ஆஸ்திரேலிய தொடரில் கண்டிப்பாக விளையாடுவேன் என்று நினைத்து இருந்தேன். தனிப்பட்ட முறையில் நான் அப்படித்தான் யோசித்து வந்தேன். ஆனால் என்னை அணியின் சேர்க்கவில்லை.

உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடுவது பற்றி தேர்வு குழுவினர் அதிகமாக பேசுகின்றனர். நானும் 4,5 ஆண்டுகளாக உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி வருகின்றேன். ஆனால் சில சமயம் செயல்பாடுகளை தாண்டி நாம் எப்படி களத்தில் விளையாடுகிறோம் என்பதை தான் பார்க்கிறார்கள். அனுபவம் நிச்சயம் டெஸ்ட் கிரிக்கெட்டில் பேசும் இந்திய அணிக்காக நான் பல்வேறு போட்டிகளில் விளையாடி இருக்கின்றேன்.

பல ஆண்டுகளாக உழைத்து இருக்கின்றேன். என்னைப் போன்ற ஒரு அனுபவ வீரருக்கு நிச்சயம் கம்பேக் கொடுப்பதற்கான ஒரு வாய்ப்பை தேர்வு குழுவினர் வழங்க வேண்டும். ஆனால் என்னிடம் தேர்வு குழுவினர் பேசுவதே கிடையாது. எனவே என்னால் எதை கட்டுப்படுத்த முடியுமோ, அதில்தான் நான் கவனம் செலுத்தி வருகின்றேன்.

அதை தான் தற்போது நான் செய்து வருகின்றேன். ரோகித் சர்மா தற்போது ஆஸ்திரேலிய மண்ணில் சிறப்பாக விளையாடி தொடர் நாயகன் விருது வென்றிருக்கிறார். இதன் மூலம் வயது வெறும் நம்பர் மட்டும்தான் என்பதை அவர் நிரூபித்து இருக்கின்றார். ரோகித், கோலி போன்ற வீரர்கள் பல ஆட்டங்களை நமக்காக வெற்றியை கொடுத்திருக்கிறார்கள். இதனால் தான் நான் சொல்கின்றேன். உங்களுக்கு அனுபவம் என்பது மிகவும் தேவை. தொடர்ந்து இளம் வீரர்களை வைத்து நாம் விளையாட கூடாது.

சர்பராஸ்கான் போன்ற வீரர்கள் எந்த விமர்சனத்திற்கும் செவிசாய்க்க கூடாது. பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்தி விளையாட வேண்டும். ஒட்டுமொட்டு மும்பை கிரிக்கெட்டும் அவர் பின்னால் இருக்கின்றது. எங்களுக்கு அவர் எவ்வளவு நல்ல வீரர் என்று தெரியும் என ரஹானே கூறியுள்ளார்.

Story first published: Sunday, October 26, 2025, 23:57 [IST]
Other articles published on Oct 26, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+