ராகுலின் டெலி அல்லி கொண்டாட்டம்.. தெறிக்க விட்ட நெட்டிசன்கள்!
Recommended Video

பிராடுக்கு 15% அபராதம்! ராகுலின் டெலி அல்லி கொண்டாட்டம்- வீடியோ
ட்ரெண்ட்பிரிட்ஜ்: இந்திய இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ட்ரெண்ட்பிரிட்ஜில் நடைபெற்று வருகிறது.

பரபரப்பாக நடைபெற்று வரும் இப்போட்டியின் நடுவே இந்திய வீரர் ராகுல் செய்த ஒரு விஷயம் தான் தற்போது ட்விட்டரின் ஹாட் டாபிக்.

அவர் செய்தது இதுதான். இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட்,இரண்டாவது இன்னிங்சில் பும்ரா பந்துவீச்சில் இரண்டாவது ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்த கேஎல் ராகுலிடம் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டையை இழந்தார். அந்த கேட்ச்சை பிடித்தவுடன் ராகுல் தனது கொண்டாட்டத்தை டெலி அல்லி டான்ஸ் மூலம் வெளிப்படுத்தினார். அவ்வளவு தான். பிடித்து கொண்டார்கள் நெட்டிசன்கள்.

ட்விட்டரில் ராகுலின் கொண்டாட்டத்தை #DeleAllichallenge என்று டேக் செய்து கொண்டாடி வருகிறார்கள்.

ராகுல் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இதுவரை 5 கேட்ச்களை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டெலி பெல்லி செலிபிரேஷன் முதல் முதலாக மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியின் நடுக்கள வீரர் ஜெஸ்ஸி லிங்கர்ட் அவரால் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Story first published: Wednesday, August 22, 2018, 10:21 [IST]
Other articles published on Aug 22, 2018


Click it and Unblock the Notifications