இந்த தம்பிங்க சூப்பர்..! சும்மா கலக்குறாங்க…! அடுத்த போட்டியிலும் இவங்க தான் ஓப்பனர்ஸ்..!
Recommended Video
ஆன்டிகுவா: ராகுலும், மயங்க் அகர்வாலும் சிறப்பாக ஆடுவதால் இருவரும் அடுத்து வரக்கூடிய போட்டிகளில் துவக்க வீரர்களாக களம் இறங்குவார்கள் என்று கேப்டன் கோலி கூறியிருக்கிறார்.
இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் ஆன்டிகுவாவில் துவங்கியது.
போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி பேட்டிங் செய்தது. முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ரகானே 81 ரன்கள் அடித்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.

அசத்தல் துவக்கம்
துவக்க வீரர் கேஎல் ராகுல் 44 ரன்களும், விஹாரி 32 ரன்களும் எடுத்தனர். இந்த போட்டியில் ராகுல் மற்றும் அகர்வால் ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்கினர். இந்நிலையில் துவக்க வீரர்கள் பற்றி கேப்டன் கோலி பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.

சிறப்பான ஆட்டம்
அதில் அவர் கூறியதாவது : ராகுலும், அகர்வாலும் அடுத்த போட்டியிலும் துவக்க வீரர்களாக களம் இறங்குவார்கள். ஏனெனில் அகர்வால் ஆஸ்திரேலிய தொடரின் சரி அதற்கு முன்பும் சரி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

வரும் போட்டிகள்
ஆகையால் அவருக்கு வாய்ப்பு அளிப்பது கட்டாயம். ராகுலும் துவக்கத்தில் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாகவே விளையாடினார். சற்று தடுமாற்றம் இருந்தாலும் வாய்ப்பு வழங்க உள்ளேன். எனவே இவர்கள் இருவருமே இந்திய அணியின் டெஸ்ட் போட்டிகளில் துவக்க வீரர்களாக விளையாடுவார்கள் என்றார்.

பலர் கருத்து
இந்த போட்டியில் இந்திய அணியில் ரோகித், விஹாரி ஆகிய இருவரில் யார் இறக்கப் படுவார் என்பது பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. கங்குலி, சேவாக், அக்தர் ஆகியோர் ரோகித்தைத்தான் சேர்க்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தனர்.

ரசிகர்கள் கருத்து
ஆனால் ரோகித் சர்மாவிற்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை. ஹனுமா விஹாரி தான் அணியில் எடுக்கப்பட்டிருந்தார். இது குறித்தும் பல ஜாம்பவான்கள் கருத்து கூறியிருந்தனர். ரசிகர்களும், இதற்கு அதிருப்தி தெரிவித்திருந்தனர்.


Click it and Unblock the Notifications