என்னது 39 இன்னிங்க்ஸ் தானா? 1500 ரன்களை குவித்த இளம்வீரர்... ரசிகர்கள் கொண்டாட்டம்
கேன்பெரா : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடரின் முதல் போட்டி கேன்பெராவில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் 1500 ரன்களை பூர்த்தி செய்துள்ளார் கேஎல் ராகுல். இதன்மூலம் டி20 வடிவத்தில் இந்த சாதனையை செய்துள்ள 6வது இந்திய வீரர் என்ற பெருமை ராகுலுக்கு கிடைத்துள்ளது.
இந்த 2020 ஆண்டில் மட்டுமே 21 டி20 போட்டிகளில் விளையாடி 993 ரன்களை குவித்துள்ளார் ராகுல்.

21 டி20 போட்டிகள்... 933 ரன்கள்
இந்திய வீரர் கேஎல் ராகுல் சிறப்பான வீரராக தன்னை சமீப காலங்களில் அடையாளப்படுத்தி வருகிறார். இந்த ஆண்டில் மட்டுமே தான் விளையாடிய 21 டி20 போட்டிகளில் 993 ரன்களை குவித்து அனைவரையும் ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கியுள்ளார் ராகுல்.

அதிக ரன்களை குவித்து சாதனை
பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் இந்த ஆண்டியல் 29 இன்னிங்சில் 1242 ரன்களை குவித்துள்ள நிலையில் அவரை தொடர்ந்து அடுத்த இடத்தில் உள்ளார் கேஎல் ராகுல். சமீபத்தில் நடந்து முடிந்துள்ள ஐபிஎல் 2020 தொடரிலும் 700 ரன்களுக்கு மேல் குவித்து அதிக ரன்களை குவித்தவர் என்ற பெருமையை படைத்துள்ளார்.

1500 ரன்கள் சாதனை
இந்நிலையில் சர்வதேச டி20 வடிவத்தில் 1500 ரன்களை கடந்து சாதனை புரிந்துள்ளார் ராகுல். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் அபாரமாக விளையாடி அரைசதத்தை கடந்துள்ள ராகுல், 6வது இந்திய வீரராக 1500 ரன்களை கடந்து சாதனை புரிந்துள்ளார். இதையடுத்து டிவிட்டரில் ரசிகர்கள் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

37 பந்துகளில் அரைசதம்
தற்போதைய ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3 போட்டிகளை கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் துவக்க வீரராக களமிறங்கிய கேஎல் ராகுல் 37 பந்துகளில் அரைசதத்தை கடந்துள்ளார். அடுத்தடுத்து கேப்டன் விராட் கோலி உள்ளிட்ட வீரர்கள் அவுட் ஆன நிலையிலும் நிலையாக நின்று விளையாடி வருகிறார் ராகுல்.


Click it and Unblock the Notifications